கருணாநிதியை சந்தித்தபோது நடந்தது இதுதான் – ஜெய் பீம் இயக்குனர் பகிர்ந்த சுவாரசியம்

0
1156
Nyanavel
- Advertisement -

மறைந்த தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் குறித்து ஜெய் பீம் இயக்குனர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக டிஜே ஞானவேல் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராக பணியாற்றி இருந்தார். பின் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஞானவேல் திரைப்பயணம்:

மேலும், இந்த படம் சமூக சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பழங்குடியினர் மக்கள் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், இது பழங்குடியினர் மக்களின் நிலைமையை இந்த படம் கூறி இருந்தது. இதனை அடுத்து ஞானவேல் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானவேல் பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழா தற்போது கொண்டாடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் ஞானவேல் பத்திரிக்கையாளராக அவரை சந்தித்த அனுபவத்தை குறித்து தன்னுடைய facebook பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நேர்காணல் செய்ய கனிமொழி மூலம் நேரம் கேட்டிருந்தேன். சீனியர்கள் தான் பொதுவாக இத்தகைய நேர்காணல் எடுக்க வருவார்கள்.

-விளம்பரம்-

கருணாநிதி குறித்து சொன்னது:

அவரிடம் தமிழிலக்கிய மாணவன் என்று சொன்னதும் கூடுதல் அன்புடன் பேசத் தொடங்கினார். அவருடைய ‘சங்கத் தமிழ்’ நூலைப் படித்திருக்கிறேன் என அதுபற்றி நான் பேசத் தொடங்கியதும் புன்முறுவல் செய்தார். சமகால அரசியல் குறித்த கேள்விகளை முன் வைக்கத் தொடங்கியதும் நையாண்டி, கோபம், தெளிவு, சாதுர்யம் என பதில்கள் பிரவாகம் எடுத்தன.

ஓரளவு தயாரிப்போடு போயிருந்தாலும் சந்திப்பு தொடங்கும் வரை சிறிதளவு தயக்கம் இருந்தது. அவர் பேசத் தொடங்கியதும் தயக்கம் விலகி என்னை முழுமையான பத்திரிகையாளராகவும், அவரை தமிழின வரலாற்றின் தவிர்க்க முடியாத தலைவராகவும் உணர்ந்தேன். இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த தலைவரின் கரம் பற்றி நின்ற அந்தத் தருணம், என் வாழ்நாளுக்கானது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement