எம்ஜிஆர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தில் நடித்த ரஜினி – படமும் செம ஹிட். என்ன படம் ? எம் ஜி ஆர் ஏன் விலகினார் தெரியுமா ?

0
2018
- Advertisement -

எம்ஜிஆர் தவறவிட்ட படத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவர் நடிகர் என்பதைவிட தமிழ்நாட்டின் முதல்வர் என்று சொல்லலாம். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் நடிப்பதாக கூறி அறிவிப்பு அறிவித்து வெளிவராத படங்கள் ஏராளமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்கள் இவர் அறிவித்து வெளிவராமல் போனது. மேலும், படங்கள் குறித்து அறிவித்து வெளிவராமல் போன உலகளவு சாதனையில் எம்ஜிஆருக்கு தான் முதல் இடம் கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு இவர் பல படங்களை அறிவிப்போடு நிறுத்திவிட்டார். மேலும், சில படங்கள் பூஜையுடன் நின்று இருக்கின்றது.

- Advertisement -

எம் ஜி ஆர் கைவிட்ட படங்கள்:

சில படங்கள் படப்பிடிப்பு தொடங்கி நின்றிருக்கிறது. பொன்னியின் செல்வன் படனும் எம்ஜிஆர் அறிவித்து கைவிடப்பட்டது தான். இந்த நிலையில் எம்ஜிஆர் அறிவித்து வெளிவராத படத்தில் ஒன்றுதான் தாய் வீடு அதாவது, 1968 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் காதல் வாகனம் என்ற படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார். இதனை அடுத்து அவர் தாய் வீடு என்ற படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தேவர் பிலிம்ஸின் முதல் வண்ண திரைப்படம் இதுதான் என்று அறிவித்தார்.

எம் ஜி ஆர் தாய் வீடு படம்:

இந்த தகவல் பத்திரிகையில் எல்லாம் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதாநாயகி குறித்து தேர்வு செய்திருந்தார்கள். இந்த படம் இருண்ட காடுகளில் மத்தியில் எடுக்கப்படுவதாகவும், இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும் எல்லாம் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், காதல் வாகனம் படத்திற்கு பிறகு தாய்வீடு படம் எடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் கைவிடப்பட்ட படங்களில் தாய் வீடும் ஒன்றாகவே நின்று விட்டது. அதற்கு பதில் அவர் அக்கா தங்கை என்ற படத்தை ஜெய்சங்கர் கே ஆர் விஜயா வைத்து தேவர் எடுத்தார்.

-விளம்பரம்-

ரஜினியின் தாய் வீடு:

தேவர் மறைவுக்கு பிறகு அவருடைய மருமகன் தியாகராஜன் தான் படங்களை இயக்க ஆரம்பித்து இருந்தார். அப்படித்தான் ரஜினி தேவர் கம்பெனி பேனரில் நடித்த முதல் படம் தான் தாய் மீது சத்தியம். பின் எம்ஜிஆர் கைவிட்ட தாய்வீடு படத்தை ரஜினியை வைத்து இயக்க முடிவு செய்தார்கள். பின் வெற்றிகரமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தாய் வீடு படமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், எம்ஜிஆர் நடிக்க இருந்த தாய்வீடு படத்தின் கதைக்கும், ரஜினி நடித்த தாய்வீடு படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை.

ரஜினியின் ஜெயிலர் :

இரண்டு படங்களின் கதைக்களம் வேறு. அதோடு படத்தின் கதாபாத்திரங்களும் வேறு. அதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை இடங்கள் என்று கூறப்பட்டது. ஆனால், ரஜினி ஒரே வேடத்தில் தான் நடித்தார். ஆரம்ப காலத்தில் கடுமையாக போராடிய ரஜினி தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement