அவர 12 வருசமா எனக்கு தெரியும், ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயகம் கேங்கில் இருந்த நடிகர் குறித்து நெல்சன் சொன்ன சுவாரசிய தகவல்.

0
2381
- Advertisement -

ஜெயிலர் படத்தில் தன்ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் டிரெண்டிங்காக சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், தன்ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

நெல்சன் அவர்களின் முயற்சி :

மேலும், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விநாயகம். இவருடைய நண்பராக படம் முழுவதும் தன்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பயணித்திருப்பார்.

-விளம்பரம்-

தன்ராஜ் கதாபாத்திரம்:

இவர் வேற யாரும் இல்லைங்க, டாக்டர் படத்தில் கப்பர் கதாபாத்திரத்தின் கேங்கில் நடித்து இருப்பார். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் தான் டாக்டர். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் தன்ராஜ் ஒருஎன்ற சிறு ரோலில் நடித்துரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளர் ஜெயிலர் படத்தில் வில்லனின் நண்பராக நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக சமீபத்தில் நெல்சன் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

நெல்சன் அளித்த பேட்டி:

அதில் அவர், தன்ராஜ் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்னுடைய பழைய ஜிம் மாஸ்டர் அர்ஷத். 12 வருஷமா எங்களுக்கு பழக்கம். ஆரம்ப காலத்தில் இருந்தே அவரது வித்தியாசமான செயல்கள், நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். ஜெயிலர் படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு இவர் செட் ஆவார் என நினைத்து வைத்தேன். அதேபோல் ரசிகர்கள் அவரது பர்ஃபார்மன்ஸை ரசித்து சிரித்து கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் படத்திலும் அந்த அடிவாங்கும் காட்சியில் கையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் நபர் இவர் தான் என்றும் கூறி இருக்கிறார்.

Advertisement