Comeback கொடுத்தார்களா ரஜினி மற்றும் நெல்சன் ? – ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.

0
2533
Jailer
- Advertisement -

ஜெயிலர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 80 கால கட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்த தகவல் தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா,யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும் அனைவரும் எதிர்பார்த்தபடி ஜெயிலர் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படத்தை லேட்டாக ரிலீசாகி இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த படத்தை முன்னாடியே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதேபோல் அமெரிக்கா, துபாய் போன்ற பிற நாடுகளில் ஜெயிலர் படம் முன்னதாக ரீலிஸ் ஆகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்பது மணிக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இதற்கு தமிழ்நாட்டில் விதித்த சட்ட திட்டங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறர்கள். அதில் ஒருவர், ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் வில்லனையும், ஜெயிலர் படத்தின் வில்லனையும் ஒப்பிட்டு பதிவு போட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஜெயிலர் படத்தை ஒரே வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் பாபா படம் தான் என்று கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

இன்னொருவர் ஜெயிலர் படத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்தால் பரவாயில்லை. படம் முழுக்க குறையாகவே இருக்கிறது. முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி மொக்கை. காமெடி பெரிதாக செட் ஆகவில்லை என்றெல்லாம் கலாய்த்து போட்டிருக்கிறார்கள். இதை விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என்று கூறுகிறார்கள். காரணம், ஏற்கனவே விஜய்- ரஜினி ரசிகர்கள் மத்தியில் சண்டை சென்று கொண்டிருக்கும் போது இப்படி எல்லாம் அவர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மையில், ரஜினிகாந்த், யோகி பாபுவின் காமெடி நன்றாக தான் இருக்கிறது. இறுதியில் எதிர்பாக்காத டீவ்ஸ்ட் படம் நன்றாக இருக்கிறது. மீண்டும் சென்று பார்க்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார் நெல்சன். இந்த படத்தின் மூலம் நெல்சன் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம். படத்தின் இசை, காட்சி, கதை, நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

Advertisement