ரஜினியின் சொந்த மாநிலத்தில் ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனம் என்ன ? இதோ வீடியோ

0
1245
- Advertisement -

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார். அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள்.

- Advertisement -

இதனால் மனம் உடைந்த ரஜினி தன் மகன் நேர்மையாக இருந்ததனால் தான் இறந்துவிட்டதாக நினைத்து அந்த கும்பலை பழிவாங்க கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆனது? ரஜினி தன் மகனை கொலை செய்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்தாரா? பலி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மேலும், இவர் யோகி பாபு உடன் செய்யும் காமெடியும் பயங்கரமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் முழுவதும் ரஜினியே தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். ரஜினியை அடுத்து வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகம் தன்னுடைய சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், ஒரு வித்தியாசமான வில்லன் ரோலில் கலக்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவரை அடுத்து படத்தில் வரும் தமன்னா, ஜாக்கி, சிவராஜ் குமார், சுனில், மோகன்லால் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இவர்கள் காட்சிகள் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால் இந்த படத்தில் அவர் ரொம்பவே மெனக்கட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கட்சியும் பார்த்து பார்த்து கொடுத்திருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ப ஜெயிலர் படத்தை கொடுத்திருப்பது ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

படம் முழுக்க ஆக்சன் காட்சிகள் பட்டையை கிளப்பி இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் அனிருத்தின் பின்னணி இசை பிரமாதமாக செட்டாகி இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக நெல்சன் ஜெயிலர் படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

நிறை:

ரஜினியின் நடிப்பு சிறப்பு

நெல்சன் கதையை கொண்டு சென்ற விதம் அருமை

பின்னணி இசை பட்டையை கிளப்பி இருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

கிளைமாக்ஸ் ஆக்சன் அதிரடி காட்சிகள் தூள்

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

மொத்தத்தில் ஜெயிலர் படம் – ரஜினி ரசிகர்களுக்கு செம மாஸ்

Advertisement