கோடிகளில் வசூல் செய்யும் ஜெயிலர் படத்தின் வில்லனுக்கு லட்சங்களில் சம்பளமா ? எவ்ளோ தெரியுமா ?

0
1474
jailer
- Advertisement -

ஜெயிலர் பட வில்லன் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி
வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் முதல் வாரத்தின் முடிவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக கலெக்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

- Advertisement -

ஜெயிலர் பட வில்லன்:

அந்த வகையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக வருபவர் மலையாள நடிகர் விநாயகம். சொல்லப்போனால், இவர் ஒரு வித்தியாசமான வில்லன் ரோலில் கலக்கி இருக்கிறார் என்றும் குறிப்பிடலாம். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் வேற யாரும் இல்லைங்க, விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக விநாயகம் நடித்திருந்தார். சின்ன வில்லனா நடித்த இவர், தற்போது ஜெயிலர் படத்தில் பெரிய வில்லனா கலக்கி இருக்கிறார்.

விநாயகம் நடித்த படங்கள்:

இவர் மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் 25 வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் திமிரு படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் மலையாள மொழிபடங்களில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ஜெயிலர் படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

விநாயகம் வாங்கிய சம்பளம்:

தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் விநாயகம் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்காக விநாயகம் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, ஜெயிலர் படம் முழுக்க வரும் சில நபர்களில் விநாயகமும் ஒருவர். இவர் மாஸ் ரவுடியாக இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார். மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது இவருடைய கதாபாத்திரம் அதிகமாகவே பேசப்பட்டிருக்கிறது. வர்மன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கும் இவருக்கு வெறும் 35 லட்சம் ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெயிலர் பட நடிகர்கள் வாங்கிய சம்பளம்:

மேலும், இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். ஜெயிலர் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் அவர்களுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பத்து நிமிட காட்சிகளுக்கும் குறைவாக வரும் மோகன் லாலுக்கு எட்டு கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமன்னா மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

Advertisement