‘இந்த காட்சிய பார்த்து கண்ணே கலங்கிடிச்சி’ ஜெயிலர் படத்தில் வந்த டான்சர் ரமேஷ் வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் உருக்கம்.

0
2361
Dancer-Rames
- Advertisement -

ஜெயிலர் படத்தில் டான்சர் ரமேஷ் வந்த காட்சிகளை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் நடந்த வாரம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த வர்மன் கேங்கில் இருந்த பலரும் ரசிகர்களின் பாராட்டு பெற்று வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் வரும் காட்சி ஒன்றில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த எங்கே என் புன்னகை பாடலுக்கு அவரது கேங் நடனமாடுவார்கள்.

-விளம்பரம்-

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து அந்த காட்சியில் நடித்துள்ள டான்சர் ரமேஷை கண்டு பலரும் தற்போது வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ், பின்னர் தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கு ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் வெளியாகும் முன்னரே இவர் இறந்து விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனாலும் படத்தில் இவரது காட்சிகள் இடம் பெற்ற போது இவரது இறப்பை அறிந்த ஒரு சிலர் இவரது காட்சி வந்த போது கைதட்டி ஆராவாரம் செய்தனர். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்திற்கு பின்னர் இவர் இறந்த செய்தியை அறிந்த பலரும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ். இவர் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டத்தின் 10வது தளத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ரமேஷ் முதல் மனைவி “சித்ரா இவரை இரண்டாவது மனைவிதான் கொலைசெய்து விட்டார் என்று குற்றம் சாடுகிறார்.

-விளம்பரம்-

இப்படி பட்ட நிலையில் இது குறித்து ரமேஷின் இரண்டவது மனைவி இன்பவள்ளி இந்த விவகாரம் குறித்து பேட்டி ஓன்று கொடுத்திருந்தார்.எங்களுக்கு இடையே 20 வருடங்களுக்கு முன்பே காதல் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்புதான் என்னுடைய கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அதனால் ரமேஷ் எங்களுடன் இருப்பது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.

இப்போதுதான் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி பணம் சம்பாதித்தார். ஆனால் இதற்கு முன்பெல்லாம் நாங்கள் தான் அவரை பார்த்துக்கொண்டோம்.எனக்கு மாதம் ரூ 12ஆயிரம் சம்பளமாக வரும், கணவரின் உதவித்தொகை ரூ3ஆயிரம் வரும் அதுபோக என்னுடைய பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இந்த வருமானத்தை வைத்துதான் அவரை பார்த்துக்கொண்டோமே தவிர அவருடைய வருமானத்தில் நாங்கள் இல்லை.

என்னுடைய பிள்ளைகளை அவருடைய பிள்ளைகள் போலத்தான் அவர் நடத்துவார். அவர் எங்களுக்கு பலமாகத்தான் இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கம் குடி மட்டும்தான். ஏற்கனவே காசு இல்லை என்று தற்கொலை முயற்சி செய்தார். இப்படிப்பட்ட நிலையில் அவருடைய பிறந்தநாள் வந்தது. காலையில் சர்ச்சுக்கு சென்று வந்தோம், பிறந்தநாள் அன்று குடிக்க வேண்டாம் என்றும் நான் பணம் கொடுக்கவில்லை, அதனால் மது அருந்தும் இடத்தில் கேட்டுக்கொள்ளலாம் என்று சென்ற அவருக்கு யாருமே கொடுக்காத காரணத்தினால் மிகவும் கோபமாகி விட்டார்.

வீட்டுக்கு வந்த அவர் என்னை பயங்கரமாக அடித்தார், இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்கத்துக்கு அறைக்கு மகளுடன் சென்று விட்டேன். பின்னர் எந்த சப்தமும் கேட்காததால் என்னுடைய பெண் சென்று பார்த்தபோது அவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நாங்கள் அழுதுகொண்டே போலீசுக்கு தகவல் அனுப்பினோம். பின்னர் தான் போலீஸ் வந்தனர். ஒரு வேளை குடிப்பதற்கு பணம் கொடுத்திருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார். ரஜனியின் ஜெயிலர் படத்தில் நடித்ததற்கு 7000ரூபாய் கொடுத்தார்கள். அதுதான் அவரிடம் நாங்கள் வாங்கிய பணம்.’ என்று கூறி இருந்தார்.

Advertisement