‘பிடிவாதம் பிடிக்காமல் இதைச் சரிசெய்வது மொழியின் நலம்’ – மதுரையில் திறக்கப்பட இருக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருக்கும் பிழையை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன்.

0
438
- Advertisement -

மதுரையில் திறக்கப்பட இருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் இருக்கும் பிழையை சுட்டிக்காட்டி ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடிந்த்து.

- Advertisement -

ஜேம்ஸ் வசந்தன் சிறிது காலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சியில் தலை காண்பிக்காமல் இருக்கிறார்.தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒருலட்சம் என்ற நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கினார். சமீப நாட்களாக ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற மொழி சொற்களின் உண்மையான தமிழ் சொற்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் ‘ மதுரையில் வருகிற 24-ம் திகதியன்று திறக்கப்பட இருக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்தான். நேற்று அதைப்பற்றிய ஒரு தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்தேன். அரங்கத்தின் நுழைவாயிலில் தமிழிலும் இங்லிஷிலும் “ஏறுதழுவுதல்” என்று பொறித்திருப்பதைக் கண்டேன். இங்லிஷில் எழுதப்பட்டிருப்பது பிழையாக உள்ளது. “AERUTHAZHUVUDHAL” என்றிருக்கிறது.

-விளம்பரம்-

தமிழில், “ஏறுதழுவுதல்” என்கிற சொல்லில் “ஏ” என்கிற முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பினும் அது உயிர்மெய் ஒலியாகத்தான் (யே) உச்சரிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இது “YERU…” என்றே எழுதப்பட வேண்டும். இங்லிஷில் எழுதுவதன் நோக்கமே தமிழ் தெரியாதவர்க்கு உதவத்தான். இப்போது எழுதப்பட்டிருக்கும் விதத்தில் வாசித்தால் வெளிநாட்டவர் இதை “AEROPLANE” உச்சரிப்பதைப் போல தொண்டையிலிருந்து உயிரெழுத்தாக உச்சரிப்பார்கள்.

இரண்டாவது பிழை தீரா விவாதமான “ழு” ஒலி. வெளிநாட்டவர் “AERUTHAZHUVUDHAL” என்பதை “ஆறுதஸுவுதல்” என்றே வாசிப்பார்கள். “YERUTHALUVUDHAL” என்று எழுதினால் “ஏறுதலுவுதல்” என சரியான உச்சரிப்புக்கு அருகில் வர உதவும். பிடிவாதம் பிடிக்காமல் இதைச் சரிசெய்வது மொழியின் நலம்’ என்று குறிப்பிட்டு .#mkstalin #dmkyouthwing #TamilNaduGovernment #tncmstalin #UdayanidhiStalin போன்றவர்களை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement