உங்களுக்கு வேணும்னா அதை நான் செய்றேன் – கேப்டன் மகன்களுக்கு விஷால் கொடுத்த வாக்கு.

0
410
- Advertisement -

விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஷால் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம்:

மேலும், தமிழகத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்தினுடைய புகழ், நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கலந்துகொண்டு இருந்தார்.

விழாவில் விஷால்:

-விளம்பரம்-

பின் அவர் மேடையில், விஜயகாந்த் அண்ணா இயங்கிய நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, பொது செயலராக, தேமுதிகவுக்கு வாக்களித்தவனாக உங்களின் வருகைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பல உதவி இயக்குனர்களுக்கு உணவளித்தவர். உணவில் எந்த பாரபட்சமும் ம் பார்க்கக் கூடாது என்று எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தவர் விஜயகாந்த்.

விஷால் கொடுத்த வாக்குறுதி:

அவர் பாதையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். விஜயகாந்தினுடைய இறப்பின் போது அங்கே நாங்கள் இருந்திருக்க வேண்டும், மரியாதை செலுத்திருக்க வேண்டும். அன்று நானும் ஊரில் இல்லை. கார்த்தியும் இல்லை. இதனால் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல நடிகர்கள் வளர காரணமாக இருந்தவர் விஜயகாந்த். அந்த வகையில் அவர் மகன் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் நான் வருகிறேன்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

என்னை பயன்படுத்திக் கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் துணையாக உன் படத்தில் நடித்து தருகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் மிஸ் செய்கிறோம். ஈகோ இல்லாத மனிதர்கள் குறைவு. அதில் முன்னுதாரணமாக இருந்தவர் விஜயகாந்த். 54 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலகநாயகன் விஜயகாந்த் தான். 54 பேரின் வீடுகளில் விளக்கேற்றி வைத்தவர். எந்த புகாரும் இல்லாத ஒரே நடிகரும் விஜயகாந்த் தான் என்று பேசி இருக்கிறார்.

Advertisement