மிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர் ஆவார். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் கலக்கியிருப்பார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார்.
அடுத்தடுத்து இரண்டு இறப்புகள் :
இப்படி ஒரு நிலையில் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு இறப்புகள் நேர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று காலமாகி இருந்தார். இதனால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இப்படி ஒரு நிலையில் வளர்மதி இறந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அவரது சகோதரர் ரங்க நாதனும் இறந்துவிட்டார். இப்படி அடுத்தடுத்து குடும்பத்தில் இரண்டு இறப்புகளால் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
கன்னிமாடம் படம் பற்றிய தகவல்:
போஸ் அவர்கள் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாண்டில்யனின் கன்னி மாடம் ‘என்ற சரித்திர நாவலில் இருந்து தான் இந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது.ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இந்த படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்கள். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ரூபி பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ஹஷிர் தயாரித்து இருந்தார். ஹரிஷ் சாய் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
போஸ் வெங்கட் அடுத்த படம் :
கன்னிமாடம் படத்தைத் தொடர்ந்து போஸ் வெங்கட் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகுகிறது. இந்த திரைப்படத்தில் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் உள்ளாக்கப்பட்ட நெருக்கடிகளை மையமாக வைத்தும், ஒரு தலைவனாக மு.க.ஸ்டாலின் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளையும் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.