மாமன்னன் பட பாடல் வரியில் வந்த பிழையை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன் – பாராட்டும் ரசிகர்கள்.

0
2910
Maamannan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படடித்து இருந்தது.

-விளம்பரம்-
Maamannan

இதனால் படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தி இருந்தது. அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. திரையரங்கில் இந்த படத்தை பார்க்க தவறிய பலர் netflixல் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் இருக்கும் பிழையை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ”மாமன்னன்’ படப் பாடல் ஒன்றைக் கேட்க யூ-ட்யூபுக்கு சென்றபோது திரையில் ஒரு இங்லிஷ் வாசகம் வந்தது. On a stone thrown by that child at a flock of sparrows, sat a dove. அது “Host of sparrows” என்றிருக்க வேண்டும். Flock of birds என்று சொல்லலாம், பலவிதப் பறவைகள் இருக்கும்போது. ஆனால் ‘குருவி இனம் இருந்தது’ என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் “Host” என்பதுதான் சரி என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாக ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை தான் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏற்கனவே இளையராஜா இசையமைத்த வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் இருக்கும் பிழையை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை போட்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.

அதில் ‘இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” இத்தனை நாளும் அது “… பல மின்னல் ஏழும் …” என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை.

-விளம்பரம்-

சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம். *சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன். இந்த சந்தம் – தன்னன்னா தன்னன்னா – தன தன்னன் னானன் னானா இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் “னானன்..” ‘னா’ என்கிற நெடிலுடன் தொடங்குகிறது. அதற்கு எழுதப்பட்டிருக்கிற ‘எழும்’ என்பது குறிலுடன் தொடங்குகிறது.

அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரிசெய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும். இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி. குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான்’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை கண்ட பலர் ‘தங்கள் தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது’ என்று பாராட்டி வருகின்றனர்.

Advertisement