சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய்யை விமர்சித்து தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.
இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இன்னைக்கு உன் படம் – நாளைக்கு இன்னொருத்தர் வசூல் அதிகமா இருக்கும்
— Satheesh (@Satheesh_2017) August 4, 2023
அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா?இப்ப வர அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா?
மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?
🤭🧖🧘 pic.twitter.com/1WrTtjdbXr
ஜெயிலர் படம்:
இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை:
அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறுகிறார்கள். அதோடு ஏற்கனவே கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.
கே ராஜன் அளித்த பேட்டி:
அப்போதே இது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல்
ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பிடித்துவிட்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். இதற்கு சில பிரபலங்கள் ஆதரவு கொடுத்தும், சில பிரபலங்கள் எதிர்த்தும் பேசியும் இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இன்று உன்னுடைய படம் நாளை இன்னொருத்தர் படம் வசூல் அதிகமாக இருக்கும்.
விஜய் குறித்து சொன்னது:
அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகி விடுவாயா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாக இருக்கிறார்கள் தெரியுமா? இப்போது வரை அவர்களால் படம் எடுக்க முடிந்ததா? மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சை எடுக்கிற? வாரிசு ஆடியோ லான்ஞ்சில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் என்று சொன்னார். அப்போதே விஜய், நான் எல்லாம் அப்படி இல்லை. அந்த பட்டத்திற்கு உரியவர் ரஜினிகாந்த் என்று சொல்லி இருந்தால் விஜயினுடைய புகழ் எங்கேயோ சென்றிருக்கும். ஆனால், அவர் சொல்லவில்லை என்று கடுமையாக விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார்.