சாதுர்யமாக, அமைதியாக கேள்வி கேட்பது எப்படினு ரபி பெர்னார்ட்ட பார்த்து கத்துக்ககொள்ளுங்க – முக்தருக்கு ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ்.

0
607
mukthar
- Advertisement -

செய்தி தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் பேட்டி எடுக்கும் பல்வேறு நெறியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த மாதங்களாக யூடியூபில் பெரும் பிரபலம் அடைந்தவர் முக்தர். இவரது நேர்காணல்களில் பங்கேற்கும் பிரபலங்களை இவர் மிகவும் தைரியமாக சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தொடர்ந்து பேசி வந்த சவுக்கு சங்கரை இவர் நேர்காணல் எடுத்தது சமூக வலைதளத்தில் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரவீந்தர் மகாலட்சுமி இருவரையும் இவர் பேட்டி கண்டபோது பல தனிப்பட்ட கேள்விகளை கேட்டிருந்தார். மேலும் இவர் பேட்டி எடுத்தது குறித்து பேசி ரவீந்தர், முக்தர் சில தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்டதாகவும், தான் பேசிய பல விஷயங்களை எடிட் செய்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் முக்தர் குறித்து பிரபல தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ‘ சிலசத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் என்பவர் பிரபலங்களை நேர்காணல் செய்துவருகிறார். சமீபத்தில்தான் இவரது ஒன்றிரண்டு சந்திப்புகளைப் பார்த்தேன்.

நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் வெட்டவெளிச்சமாக கேள்விகளைக் கேட்கிறாரே; பரவாயில்லையே, ரொம்ப நாளைக்குப் பிறகு துணிவான ஒருவர் வந்திருக்கிறாரே என்று முதலில் வியந்து பார்த்தேன்.

-விளம்பரம்-

ஆனாலும் சமயத்தில் கொஞ்சம் எல்லைமீறுகிறார், மக்கள் மத்தியில் பேசப்படவேண்டுமென்கிற ஆவலில் கொஞ்சம் முதிர்வின்றிப் பேசிவிடுகிறார் என்றும் கூடவே தோன்றியது.

அவர் தயாரிப்பாளர் ரவீந்திரனையும் அவர் மனைவியையும் நேர்காணல் செய்ததின் promo-வை சில நிமிடங்களுக்கு முன் facebook-ல் பார்த்தேன். ரவீந்திரன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அதன் மூலம் அறிந்துகொண்டேன்.

அவரிடமும் அவர் புது மனைவியிடமும் கொஞ்சமும் பண்பில்லாமல் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் தாண்டி அவர் கேட்ட அநாகரிகமானக் கேள்விகளும், அவர் கொட்டிய கொஞ்சம் கூட அறிவு வளராத முதிர்ச்சியற்ற கேவலமான விமர்சனங்களும் அவரின் பண்படாத சிற்றறிவைக் காட்டியது.

இவர் இதற்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மக்களிடம் உதைபடப் போகிறார். பொறுத்திருந்துப் பாருங்கள்.

பேட்டி எடுப்பவர் தான் அறிவாளி என நினைத்துக்கொள்வதோ, மற்றவரெல்லாம் முட்டாள்கள் என நினைப்பதோ பிரச்சனையில்லை. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்தால் அசிங்கப்பட்டுப் போவார்கள். அதை இவர் விரைவில் விளங்கிக் கொள்வார்.

James

நயமாக, நிதானமாக, சூசகமாக, சாதுர்யமாக, அமைதியாக கேள்விகளைக் கேட்டு எதிரில் இருக்கும் பிரபலம் ஆடிப்போய் வேர்த்து விறுவிறுத்து திணறித் தவித்துப் போவதை சன் டி.வி.யில் தொடக்க நாட்களில் ரபி பெர்னார்ட் எப்படித் திறம்படச் செய்தார்! அதையெல்லாம் கொஞ்சமாவது பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டாமா?

தொழில் நுட்பம் எல்லார் கைகளிலும் மலிவாகக் கிடைத்துவிட்டது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

இதை சத்தியம் தொலைக்காட்சி செய்வது வேதனைக்குரிய விஷயம். சுவிஷேஷப் பணியை ஒருபுறமும் இதைப்போன்ற தரங்கெட்டத் தயாரிப்புகளை மறுபுறமும் செய்வது முரண்.

Advertisement