செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ‘தேசிய கீதத்தை’ தூய தமிழில் உச்சரித்த ஜேம்ஸ் வசந்தன் – திட்டி தீர்த்த நெட்டிசன்களுக்கு அவரின் பதிலடி.

0
452
james
- Advertisement -

90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

- Advertisement -

இதையும் பாருங்க : சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஜோதிகா பெயரை நீக்கிய சூர்யா – காரணம் என்னன்னு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜேம்ஸ் வசந்தனும் தமிழ் பற்றும் :

மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இவர் தமிழ் மீது முகுந்த பற்று கொண்டவர்.

-விளம்பரம்-

நீண்ட இடைவெளிக்கு பின் ஜேம்ஸ் வசந்தன் :

தன்னுடைய சமூக வலைதளத்தில் கூட அடிக்கடி பல ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் சொல்லை மக்களுக்கு தெரியப்படுத்தியும் வருகிறார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜேம்ஸ் வசந்தன் செஸ் ஒளிமிபியூட் நிறைவு விழாவில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா :

சென்னையில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த விழா நேற்று படு கோலாகலமாக நிறைவடைந்தது.

ஜேம்ஸ் வசந்தன் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் தேசிய கீதம் போடப்படும் முன்னர் ஜேம்ஸ் வசந்தன் ‘இப்போது இந்திய ஒன்றிய நாட்டுப்பண் பாடப்படும், அவையோர் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறோம்’ என்று கூறி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனை திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் ” என்று பதிவிட்டுள்ளார். ஏன் ‘தேசிய கீதம்’ என்று சொல்லாமல் ‘நாட்டுப் பண்’ என்று சொன்னார் என்று ஒரு கூட்டம் கொதிக்கிறதாம். தமிழில் சொன்னதற்கு கொதித்தால் அவர்கள் யாரென்று புரிந்துகொள்ளலாம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement