டப்பிங்கின் போது ஏற்பட்ட அவமானம், கைகலப்பு வரை சென்ற பிரச்சனை – குணா படத்திற்கு பின் கமல் படத்தில் நடிப்பதையே நிறுத்திய ஜனகராஜ்

0
595
- Advertisement -

கமலஹாசன்- ஜனகராஜ் கூட்டணியில் படம் வராததற்கான காரணம் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. மேலும், கமலஹாசன் படம் என்றாலே ஜனகராஜ் காமெடி நிச்சயம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சினிமாதுறைக்கு வருவதற்கு முன்பே ஜனகராஜ், கமல்ஹாசன், சந்தான பாரதி, ஆர் எஸ் சிவாஜி ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

இவர்களை தேனாம்பேட்டை கோஷ்டி என்று தான் அழைப்பார்கள். இவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் படங்களில் சேர்ந்து தான் நடித்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய காம்போவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது. அதிலும், நாயகன், அபூர்வ சகோதரர்கள், விக்ரம், வெற்றி விழா, சத்யா போன்ற பல படங்களில் கமலஹாசன்- ஜனகராஜ் கூட்டணி சிறப்பாக இருந்தது. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த காலகட்டத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகராக ஜனகராஜ் இருந்தார்.

- Advertisement -

கமலஹாசன்- ஜனகராஜ் கூட்டணி:

மேலும், ஜனகராஜ்- கமலஹாசன் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த படம் குணா. இந்த படத்தை இயக்குனர் சந்தான பாரதி தான் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்த இந்த குணா படத்திற்கு பிறகு கமலஹாசன்- ஜனகராஜ் இருவரும் இணைந்து எந்த படத்தில் ஒன்றாக நடிக்கவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

கமலஹாசன்- ஜனகராஜ் சண்டை:

அதில், குணா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார். அப்போது ஒரு முறை ஏவிஎம் கார்டன் டப்பிங் தியேட்டரில் துரை என்ற சவுண்ட் இன்ஜினியர் இருந்தார். டப்பிங் ரூமில் ஜனகராஜ் தன்னுடைய டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே ராசி அழகப்பன் டயலாக் சரி பார்த்துக் கொண்டிருந்தார். பின் இன்ஜினியர் ரூமில் சந்தான பாரதி, ஆர்.சிவாஜி எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது ஜனகராஜ் ஏதோ ஒரு டயலாக் பேசும் போது அதை நான் சிங் என்று ராசி அழகப்பன் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

டப்பிங் அறையில் நடந்தது:

அந்த டயலாக்கை மீண்டும் ஜனகராஜ் பேசினார். அதற்குப் பிறகு ராசி அழகப்பன் ஓகே சொல்லிவிட்டார். உடனே ஆர் எஸ் சிவாஜி, இல்லை ஒன் மோர் என்று கூறியிருக்கிறார். உடனே ஜனகராஜ், இப்பதான் அவன் நான்சிங் சொல்லி ஓகேவான்னு சொல்றான், நீங்க மறுபடியும் பண்ண சொல்றீங்களே வேணாம் அடுத்த சாட் எடு என்று கூறியிருக்கிறார். அதெல்லாம் முடியாது மறுபடியும் பேசு என்று ஆர் எஸ் சிவாஜியும், சந்தான பாரதியும் கூறினார்கள். இதனால் இவர்களுக்குள் மத்தியில் பேச்சு வார்த்தை வளர்ந்தது.

கமல் செய்த வேலை:

பின் ஜனகராஜ் டப்பிங் ரூமில் இருந்து வெளியே வந்து விட்டார். உடனே ஆர் எஸ் சிவாஜி அவரை அடிக்க போனார். பின் இருவருக்கும் கைகலப்பு நடந்து விட்டது. இந்த விவகாரம் கமல்ஹாசனுக்கு தெரிய வருகிறது. கமலஹாசன், சந்தான பாரதியின் நண்பர் மற்றும் குணா படத்தின் இயக்குனர் என்பதால் அவருக்கு அவரின் பக்கம் தான் நின்றார். இதனால் பிரச்சனை மிகப்பெரிய அளவிற்கு சென்றது. யூனியன் வரை இந்த பிரச்சனை கொண்டு சென்றார்கள். ஒருவழியாக பேசி ஜனகராஜ் டப்பிங் பேசி கொடுத்தார். இந்த பிரச்சனைக்கு பிறகு தான் கமலஹாசன் உடன் ஜனகராஜ் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

Advertisement