கலப்புத் திருமணம், 45 ரூபாய் வாடகை வீடு, கீற்று கொட்டாய்ல வாழ்க்கை. ஜெயம் ரவி குடும்பத்தார் பகிர்ந்த ஷாக்கிங் பிளாஸ் பேக்.

0
355
- Advertisement -

சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வந்தவர்கள் தான் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா. சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர், எடிட்டர் ஆக பணிபுரிந்தவர் மோகன். எடிட்டர் மோகன் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவருடைய மகன்கள் தான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி மோகன். மூத்த மகன் மோகன் ராஜா திரைப் படங்களை இயக்கும் இயக்குனராக பணி புரிகிறார். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். மகள் ரோஜா மருத்துவ துறையில் பணி புரிகிறார். இளைய மகன் ஜெயம் ரவி பற்றி சொல்லவா?? வேண்டும்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். இவருடைய எல்லா படங்களும் பிளாக் பஸ்டர் படம் தான். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் உள்ளது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மோகன் தனது காதல் திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அதில் ‘:”நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன். எனது மனைவி ஒரு பிராமண வீட்டு பெண். எனது உண்மையான பெயர் ஜின்னா.

- Advertisement -

நடிகர் தங்கவேல் வீட்டில் தான் நான் சிறுவயதில் இருந்து வளர்ந்தேன். தங்கவேலுவுக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் என்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர் தான் எனக்கு மோகன் என பெயர் சூட்டினார். தங்கவேல் மூலம் தான் நான் சினிமாவில் எடிட்டிங் பணிகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் என் மனைவி வரலட்சுமிக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்றது’ என்றும் கூறியுள்ளார்.

அதே போல பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம்ரவி ‘முதலில் நாங்கள் Rs.45 வீட்டு வாடகைக்கு வீடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கும். அப்படி இருந்தும் நாங்கள் முதலில் ஒரு கீற்று வீட்டில் எங்களுடைய வாழ்க்கை தொடங்கினோம். காற்றடிக்கும் போது அந்த கீற்று கீழே விழும். அப்படி தான் சாதாரணமாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம். நான் பிறந்ததே ஓட்டு வீட்டில் இருக்கும் போது தான். நான் பிறந்ததுக்கு அப்புறம் தான் வீடு, கார் எல்லாம் வாங்கினதா என் அப்பா சொல்லுவார்.

-விளம்பரம்-

இப்ப இந்த அளவுக்கு வந்திருக்கும் என்றால் என் தந்தை தான் காரணம். தெலுங்கு சினிமாவில் மிக பெரிய தயாரிப்பாளர் ஆவார். அவர் எங்களால் தமிழ் சினிமாவுக்குள் வந்து விட்டார். என் அப்பா என்னை நம்பி என் மகனுக்காக செய்கிறேன் என்று சொல்லி படம் தயாரித்தார். பல பேர் என்னை நம்பி இவ்வளவு பணம் போடலாமா? என்று கூறினார்கள். என் மகனுக்காக நான் எதையும் செய்ய தயார் என்று என் தந்தை கூறினார்.

அவருடைய நம்பிக்கையையும், துணையும் தான் இந்த அளவிற்கு நாங்கள் உயர்ந்து இருக்கிறோம். என் மகன்கள் குணாதிசயங்களை வைத்து தான் நான் தொழில்களை முடிவு செய்தேன் என்று என் தந்தை கூறுவார் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த விடீயோவை காணும் போது ஜெயம் ரவி குடும்பத்தினர் இத்தனை ஏழ்மையில் இருந்து வந்தவர்களா என்ற வியப்பு தான் வருகிறது.

Advertisement