தமிழ் சினிமாவின் லீட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு, சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர். சிம்பு மீது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு குற்றச்சாட்டை கூறியுள்ளனர் அதே போல சிம்புவிற்கு போட்டி நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். இவர்கள் இருவருக்கும் நடந்த பல்வேறு மறைமுகமான பிரச்சனைகளை பலரும் அறிவார்கள்.
நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட படங்கள் பல உள்ளது. சிம்பு மற்றும் அசின் நடிப்பில் வெளியாக இருந்த “ஏ சி” மற்றும் சிம்பு நயன்தாரா நடிப்பில் வெளியாக இருந்த “கெட்டவன்” போன்ற படங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் பின்னர் கைவிடபட்டது.
இதையும் பாருங்க : பிரியாணி படத்தில் வந்த நடிகையா இப்படி பிகினி உடையில் நடித்துள்ளார் – வீடியோ இதோ.
அதே போல சிம்பு மற்றும் அசின் நடிப்பில் ‘ஏ சி’ என்ற படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரை சென்றது. இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்குவதாக இருந்தார். ஆனால், சில பல காரணங்கள் இந்த படம் கைவிடபட்டது. இந்த நிலையில் இந்த படடத்திற்காக சிம்பு மற்றும் அசின் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம். ‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடகடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படமும் கைவிடபட்டதாக கூறப்படுகிறது.