ஜெயம் ரவி ஜீனி படத்திற்கு போடப்பட்ட பூஜை குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு இவர் தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
அதனை தொடர்ந்து இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. மேலும், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இந்த படம் வெளியாகி இருந்தது. சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
ஜெயம் ரவி திரைப்பயணம்:
இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் பொன்னியின் செல்வன் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனை அடுத்து கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் அயலான். இந்த படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.
ஜெயம் ரவி நடிக்கும் படங்கள்:
மேலும், ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி போன்ற பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து ஜெயம் ரவி அவர்கள் இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அஹமத் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதை தவிர ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில், சைரன் போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜீனி படம்:
இந்த நிலையில் ஜெயம் ரவி புது படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அறிமுக இயக்குனர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் தான் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜீனி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.
We're thrilled to announce our PAN-INDIAN production that promises to captivate audiences across the World! #Genie Produced by @VelsFilmIntl @IshariKGanesh starring @actor_jayamravi
— Vels Film International (@VelsFilmIntl) July 5, 2023
An @arrahman Musical
An #ArjunanJr Magical@IamKrithiShetty @kalyanipriyan @GabbiWamiqa pic.twitter.com/k7OXmfPt9R
படத்தின் போஸ்டர்:
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தாறுகிறார். மேலும், இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய பூஜை சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் ஜெயம் ரவி, தேவையானி, கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதை தற்போது அதிகாரப்பூர்வமாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.