மெடிக்கல் ஷாப், பெட்ரோல் பங்க்ல வேலை, பால் பண்ணை – சினிமாவிற்கு வந்த கதை சொன்ன ஜெயபிரகாஷ்.

0
490
jayaprakash
- Advertisement -

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அனைத்திலும் பொருந்தக்கூடியவர். சிறப்பு தோற்றங்களில் சிறப்பாக தோன்றியவர். ஒரு சொக்கலிங்கம் வாத்தியாராக இருக்கட்டும் ஜூடோ டாக்டராக இருக்கட்டும் ஒரு பிரகாசம் அப்பாவாக இருக்கட்டும் பண்ணையாராக இருக்கட்டும் இவர் சிறப்பாக பண்ண கேரக்டர்களினல் மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் அவர்கள். 1962 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மயிலாடுதுறையின் அருகில் உள்ள சீர்காழி என்ற கிராமத்தில் பிறந்தார். பி யு சி மயிலாடுதுறையில் ரயில் மூலம் இவர் கிராமத்தில் இருந்து பயணித்து வந்து படித்தார். மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் படிப்பு நிறுத்திக் கொண்டு முதலில் மெடிக்கல் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு நிரஞ்சன் மற்றும் துஷ்யந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

இவரது விடாத ஆர்வத்தினால் சீர்காழியில் இருந்து சென்னை வந்து ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார் பின்பு அவரது கசின் பெட்ரோல் பங்க் ஒன்று வேலை சேர்த்து விட்டார் அங்கு உள்ள நண்பர்கள் பழக்க வழக்கம் காரணத்தினால் வட்டம் பெருகியது. இவரது விடாமுயற்சியினாலும் நண்பர்கள் மற்றும் குடும்ப உதவியுடன் பெட்ரோல் பங்க் ஒன்று தொடங்கினார்.பின்பு சென்னையில் 3 பெட்ரோல் பங்கு ஆரம்பித்தார். இன்று பால்பண்ணை ஒன்று ஆரம்பித்தால் இதில் 200 மாடுகள் வரை வளர்த்து வந்தார் சில நஷ்டங்கள் காரணமாக அப்பால் பண்ணையை மூடிவிட்டார்.

- Advertisement -

பெட்ரோல் பங்க் டு சினிமா

முதன்முதலாக 1995ஆம் ஆண்டு தெலுங்கு மிகப்பெரிய வெற்றி படமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுன் நடித்த சிசின்றி என்ற படத்தை தமிழில் டப் செய்து சுட்டி குழந்தை என்ற பெயரில் இப்படத்தை இவர் தயாரித்தார்.
இதனைத் தொடர்ந்து இப்பொழுது வரை 50 மேற்பட்ட படங்களில் தயாரிப்பாளராகவும் இணை தயாரிப்பாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். தனக்கென்ன பாணியில் சிறந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இணை தயாரிப்பாளர் ஆகும் இருந்து வெற்றிப் படங்களை கொடுத்த மிக சிறந்த மனிதர்.

தயாரிப்பாளர் டூ ஆக்டர்

இவரது முதல் படமாக 1995 ஆம் ஆண்டு வெளியான தொண்டன் நடிகர் முரளி நடித்த அதிகரிக்கப்படாத பாத்திரத்தில் நடித்தார். முதல்முறையாக 1997 ஆம் ஆண்டு டைரக்டர் மற்றும் நடிகருமான சேரனின் பொற்காலம் என்ற படத்தில் ஜெயப்பிரகாஷ் அவர்கள் தயாரிப்பாளராக இருந்தார். படத்தில் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக 2007 ஆம் ஆண்டு வெளியான மாயக்கண்ணாடி என்ற படத்தின் மூலம் மிகச் சிறந்த கதாபாத்திரமாக அனைவருக்கும் தெரிந்தவர்.இப்படத்தில் வெற்றி மூலம் அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு பசங்க என்ற படத்தில் சொக்கலிங்கம் வாத்தியாராக அனைவருக்கும் தெரிந்த அனைத்து மக்களின் உள்ளங்களில் ஆதரவு பெற்ற ஒரு கதாபாத்திரமாக தெரிந்தார். அதே ஆண்டு நாடோடிகள் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படத்தில் பிரகாசம் அப்பாவாக மிகச் சிறந்த நடிகர்கள் வெளிப்படுத்தினார் இதனை தொடர்ந்து மூடக் கூடம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தார். மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்த பண்ணையாரும் பத்மினி படத்தில் பண்ணையாராக வந்து அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இப்பொழுது வரை 160 க்கு மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள் 80 சதவீதம் அளவிற்கு வெற்றிப் படங்களே, இவர் நடித்த கதாபாத்திரம் அனைத்து பெயர் சொல்லும் கதாபாத்திரம். இரண்டு எக்ஸ் சீரியஸ் களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த எந்திரன் 2.0 படத்தில் அவருக்கு வில்லனாக வந்த அக்ஷய்குமார் அவர்களுக்கு டப்பிங் கொடுத்தார்.

கலை தாயின் கௌரவிப்பு

இவருடைய நீங்கா நடிப்பு ஆற்றலுக்கும் மற்றும் அற்புதமான திறமைக்கு பிலிம்பேர் அவார்ட் 2010 பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் மற்றும் விஜய் அவார்ட்ஸ் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் மற்றும் மேன் ட்ரீட் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் மெரிட் அவார்ட் பெஸ்ட் கேரக்டர் ஆப் ஆக்டர் என்று பல அவார்டுகளை பெற்றுள்ளார்.

Advertisement