தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் ஜெயஸ்ரீ மற்றும் மஹாலக்ஷ்மி விவகாரம் தான் என்றும் சொல்லலாம். சீரியல் நடிகை ஜெயஸ்ரீ அவருடைய கணவர் ஈஸ்வரின் குடும்ப பிரச்சனை தான் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமிக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ சோசியல் மீடியாவில் புகார் அளித்து உள்ளார். இதனால் ஜெயஸ்ரீ கணவர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். தற்போது ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகின்றனர்.
நடிகர் ஈஸ்வர் அவர்கள் ஜெயஸ்ரீ கூறுவதெல்லாம் பொய். அவள் பணத்திற்காக தான் இப்படி எல்லாம் நாடகம் போடுகிறார். அதோடு ஜெயஸ்ரீக்கும், மகாலக்ஷ்மி கணவனுக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என மீண்டும் ஒரு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மகாலட்சுமி கூட சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஈஸ்வரனும் நானும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ? அவருடன் வாழ வேண்டும் என்றோ? எந்த எண்ணமும் எனக்கு இல்லை.
இதையும் பாருங்க : போன டிசம்பரில் கல்யாணம், இந்த டிசம்பரில் விவாகரத்து. சீரியல் நடிகையின் சோகம்.
நான் என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெரும் பிரச்சினையில் உள்ளேன். ஆனால், அது என்னுடைய சொந்த பிரச்சனை. அதை இவருடன் இணைத்து பேசுவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஆனால், ஜெயஸ்ரீக்கு என்னுடைய கணவருடன் நீண்ட நாட்களாக பழக்கம் வைத்து வருகிறார் என்றும் கூறினார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹாலக்ஷ்மியின் கணவர் அணில், எனக்கு இப்பவும் மகாலக்ஷிமியை ரொம்ப பிடிக்கும். நான் இப்போது கூட அவளைக் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு எதற்காக விவாகரத்து கொடுங்க என்று கேட்கிறாள் தான் தெரியவில்லை. அவள் திரும்பி வந்தாலும் நான் முழு மனதுடன் அவளை ஏற்றுக் கொள்வேன் என்று மனமுருக பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் மஹாலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று ஜெய்ஸ்ரீ பிரச்சனை செய்ததாக மஹாலக்ஷ்மி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் ஜெய்ஸ்ரீக்கு போன் செய்து காவல் துறையை சார்ந்த போலீசார் ஒருவர் பேசியுள்ளார். அந்த ஆடியோ ஆதாரத்தை ஜெய்ஸ்ரீ தற்போது வெளியிட்டுள்ளார். ஜெய்ஸ்ரீ தான் பேசத்தான் செய்தேனே தவிர வேறு எந்த பிரசசனையும் செய்யவில்லை, வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மி வீட்டில் இருக்கும் cctv கேராவை பாருங்கள் என்று கூறியுள்ளார். ஜெய்ஸ்ரீ பேசியதை வைத்து பார்க்கும் போது மஹாலக்ஷ்மி தான் ஜெய்ஸ்ரீ மீது பழி போட இப்படி நாடகமாடுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.