SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? – முழு விமர்சனம் இதோ.

0
631
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மதுரையில் பிரபல ஜிகர்தண்டா கிளப்பின் தென் மாவட்டங்களை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி அல்லியன் சீசர். சூழ்நிலை காரணமாக சீசரால் கொலையாளியாக முந்திரிக்கப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார் ரேசர். பின் விடுதலையாகி வந்தவுடன் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய சீசரை கொல்ல வேண்டும் என்று ரேசர் துடிக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு போலீஸ் வேலையும் கிடைக்கிறது.

- Advertisement -

இன்னொரு பக்கம் பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்’ மேலிருக்கும் ஈர்ப்பினால் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவாக சீசர் ஆசைப்படுகிறார். இதனால் சீசரை பழிவாங்க இயக்குனராக ரேசர் அவதாரம் எடுக்கிறார். இறுதியில் ரேசர், சீசரை கொன்றாரா? சீசர் தன்னுடைய ஆசையை நிறைவேற்றினாரா? இவர்கள் இருவரையும் வைத்து இடையில் அரசியல் செய்தவர்கள் யார்? என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் சீசர் என்ற கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் அவர் தன்னுடைய வித்தியாசமான நடைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து ரேசர் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் பிரமாதம். படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். எமோஷனல் காட்சிகளில் சில சொதப்பல்கள் இருந்தாலும் மதுரை ரவுடியாக கேங்ஸ்டர் கதையை தெறிக்கவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் பெரியளவு செட் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் படத்தில் ஹாலிவுட் மூத்த நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை தமிழ் நாட்டுக்கு வர வைத்து படத்தில் நடிக்க வைத்தது கார்த்தி சுப்புராஜின் தனிச்சிறப்பு. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. ஆனால், இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியது. சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஓகே.

நிறை:

முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை

கதைக்களம் சிறப்பு

ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பு சூப்பர்

பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே

முதல் பாதி அருமை

கிளைமாக்ஸ்ஸில் வரும் ஜிகிர்தண்டா கனக்ஷன் அருமை

குறை :

இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் பெரிதாக கவரம்படி இல்லை

மொத்தத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – தீபாவளி வின்னர்

Advertisement