எப்படி இருக்கிறது அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ – முழு விமர்சனம் இதோ.

0
842
kuruthiattam
- Advertisement -

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல்-அதிரடி- த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதர்வாவின் குருதி ஆட்டம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் அதர்வா நடித்திருக்கிறார். இவர் மதுரையைச் சேர்ந்த இளைஞராக வலம் வருகிறார். பத்தாம் வகுப்பு அட்டம்ட் எக்ஸாம் எழுத வருகிறார் அதர்வா. அங்கு ஆசிரியராக வருகிறார் படத்தின் கதாநாயகி. அவரை பார்த்தவுடன் அதர்வா காதலில் விழுகிறார். அதுமட்டுமில்லாமல் கபடி விளையாட்டு வீரர் அதர்வா. இவருடைய கபடி அணியை வெல்ல பல அணிகள் முயற்சி செய்திருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அம்மாவானதால் இந்தியன் 2வில் காஜலுக்கு பதில் தீபிகா படுகோனேவா ? காஜலே அளித்த விளக்கம். வைரலாகும் வீடியோ இதோ.

அந்தவகையில் எதிரணி ஒன்று பல ஆண்டுகளாக அதர்வாவின் அணியை வெற்றி கொள்ள முயற்சி செய்து வருகிறது. அந்த அணியை சேர்ந்தவர் கண்ணா ரவி. இவர் மதுரையில் பெரிய தலையாக இருக்கும் ராதிகாவின் மகன். பின் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அப்போது சண்டை நடக்கிறது. அதுவே பெரிய சம்பவத்திற்கு காரணமாக அமைகிறது. இதனால் அதர்வா கைதாகிறார். பின் அதர்வாவுக்கு உதவிசெய்து நெருங்கிய நண்பராக மாறுகிறார் கண்ணா ரவி.

-விளம்பரம்-

ஆனால், கண்ணா ரவியின் கூட்டாளிக்கு இது பிடிக்காமல் போகிறது. அதனால் அவருக்கு துரோகம் செய்கிறார். இன்னொரு பக்கம், அதர்வா பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக கண்மணி என்ற குழந்தை அனுமதிக்கப்படுகிறது. அப்போதிலிருந்து அந்த குழந்தையிடம் தனி அன்பு காட்டி வருகிறார் அதர்வா. பின்னர் துரோகம் செய்ய நினைக்கும் கண்ணா ரவியின் கூட்டாளி அதர்வா மற்றும் கண்ணா ரவி இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவி விடுகிறார்.

இதனால் அதர்வா கண்முன்னே கண்ணா ரவி கொலை செய்யப்படுகிறார். இதை அறிந்த ராதிகா தன் மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார். இறுதியில் ராதிகா தன் மகனைக் கொன்றவனை பழி வாங்கினாரா? குழந்தை கண்மணியை அதர்வா காப்பாற்றினாரா? அதர்வாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் கபடி விளையாட்டு வீரராக துள்ளல் இளைஞராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதர்வா.

படம் முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் என்பதால் தன்னுடைய பங்கை கொடுத்திருக்கிறார் அதர்வா. இவரை அடுத்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கண்ணா ரவி மற்றும் வட்சன் இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு அவ்வளவு ஆழமான கதாபாத்திரம் இல்லை. இவர்களை அடுத்து ராதிகா மற்றும் ராதாரவியின் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மற்றபடி படத்தில் பல கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்திற்கு ஒட்டவில்லை என்று தான் சொல்லனும். 8 தோட்டாக்கள் படத்திற்கு பின்பு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கும் இந்த குருதி ஆட்டம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் என்றே சொல்லலாம். ஏனென்றால், திரைக்கதையில் பெரிய அளவு ஈடுபாடு இல்லை. கதைக்களத்தை பயங்கரமாக சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.

படம் முழுக்க முழுக்க சண்டை, வெட்டு குத்து என்றே காட்சிகளால் நிரம்பி இருக்கிறது. இதனால் பார்வையாளர்கள் கடுப்பேற்றும் வகையில் கதை அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இதுவே படத்திற்கு பெரிய குறையாக இருக்கிறது. அதோடு யுவனின் இசையும் படத்திற்கு இன்னொரு சொதப்பல் என்றே சொல்லலாம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதி பயங்கர சொதப்பல்.

நிறைகள் :

அதர்வா, கண்ணா ரவி, வட்சன் நடிப்பு சிறப்பு.

ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

மற்றபடி பெரிதாக சொல்லுமளவிற்கு எதுவுமில்லை.

குறைகள் :

இயக்குனர் கதைக்களத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பின்னணி இசை சொதப்பல்.

மொத்தத்தில் குருதி ஆட்டம்- வெற்றி காணவில்லை.

Advertisement