ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வந்த இந்த கதாபாத்திரம் ஜெயலலிதாவா – நடிகையே பகிர்ந்துகொண்ட உண்மை.

0
405
- Advertisement -

சமீபத்தில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது இந்த படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

குறிப்பாக, முதல்வராக நடித்த சிந்தாமணி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வைத்து இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சிந்தாமணியாக நடித்த நடிகை கபிலா வேணு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய சொந்த ஊர் கேரளா திருச்சூர். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஊட்டியில் தான்.

- Advertisement -

கபிலா வேணு பேட்டி:

லாரன்ஸ் ஸ்கூலில் தான் நான் பிளஸ் டூ வரை படித்தேன். தமிழ் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் பேச வரும். ஆனால், எழுத வராது. எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். கேரளாவின் பாரம்பரியமான குடியாட்டம் கலை பயிற்சியாளராகவும், டான்ஸராகவும் இருக்கிறேன். எங்க அம்மா மோகினி ஆட்டம் டான்சர். என்னுடைய அப்பா குடியாட்டம் டான்ஸர். நான் ஒரே ஒரு பொண்ணு தான். இதனாலே எனக்கு சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது. என்னுடைய கணவர் புகைப்பட கலைஞராக இருக்கிறார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.

பட வாய்ப்பு குறித்து சொன்னது:

தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது தான் என்னுடைய முதல் படம். இதற்கு முன்னாடி நான் கார்த்திக் சுப்புராஜ் சாரோட தயாரிப்பில் சோமிதரன் சார் இயக்கிய ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் படத்தின் சூட்டிங் போது தான் கார்த்திக் சுப்புராஜ் சார் என்னை பார்த்து ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்த கேட்டார். மொத்தம் ஏழு நாள் ஷூட்டிங் இருந்தது. அதேபோல் அந்த படத்தில் ஒரு செருப்பால் அடிக்கிற மாதிரி ஒரு காட்சி வரும்.

-விளம்பரம்-

பட அனுபவம்:

அப்போது ரொம்ப தயக்கமாக இருந்தது. ஆனால், இளவரசி சார் தான் இது நடிப்பு. கேஷுவலாக பண்ணுங்கள் என்று என்கரேஜ் பண்ணினார். நானும் ஒரிஜினாகவே செருப்பால் கண்ணா பின்னா அடித்து விட்டேன். அதற்குப் பிறகு நான் அவரோட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதேபோல் நடிகர் சைன் டாம் சாக்கோவையும் செருப்பால் அடிக்கும் போது கண்ணா பின்னா அடித்துவிட்டேன். அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்கள். அவர்கள் இந்த செருப்பால் அடித்ததெல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ரொம்ப பதட்டமாகவும் தயக்கமாகவும் இருந்தது. இதை பல ஆங்கிளில் எடுத்தார்கள்.

ஜெயலலிதா ரோல் குறித்து சொன்னது:

அதேபோல் என்னுடைய கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாவை பார்த்த மாதிரியே இருக்கு என்று சொல்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் சொல்லும்போதே இது ஜெயலலிதா மேடம் மாதிரி என்று எதுவும் சொல்லவில்லை. நான் மம்தா பானர்ஜியை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன். என்னை மாதிரியே ஒவ்வொரு கதாபாத்திரமும் ரெஃபரன்ஸ் இருக்கு. நாங்கள் ஜெயலலிதா மேடம் என்று நினைத்து எடுக்கவில்லை. கார்த்திக் சாரும் இப்படி செய்யவில்லை. இந்தியாவில் நிறைய முதல்வர்கள் இருக்கிறார்கள். அதனால் இது ஜெயலலிதா மேடம் என்று எடுத்துக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

Advertisement