தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் அவர்கள் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சில ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டே போவதால் கமலஹாசன் அவர்கள் “தலைவன் இருக்கின்றான்” என்ற தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை இவர் தன்னுடைய சொந்த நிறுவனத்தில் தயாரிக்கிறார்.
சமீபத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருதை கூட வாங்கி இருந்தார். அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி, பெங்களூர் விமான நிலையத்தில் காந்தி என்பவரால் தாக்கப்பட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : ‘இது எந்த வகையிலும் நியாயமில்லை’ – ஜெய் பீம் விகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாக TR வெளியிட்ட அறிக்கை.
விஜய் சேத்துபதி கேரளாவை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.
அதே போல சிந்துபாத் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் ஜூங்கா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இவரது மகள் ஸ்ரீஜா சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘முகிழ்’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி தன் 18 வது திருமண நாளை கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன் குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.