மாறுவேடத்தில் சென்று அஜித் பார்த்த விஜய் படம்.! அஜித்தின் இயக்குனர் சொன்ன தகவல்.!

0
724
Vijay-ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அஜித்திற்கு காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் காதல் நாயகன் என்ற இமேஜையும், அமர்க்களம் படத்தின் மூலம் மாஸ் இமேஜையும் பெற்றுக்கொடுத்தவர் இயக்குனர் சரண். அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பல்வேறு தகவலைகளை பகிர்ந்துள்ளார் சரண்.

Image result for amarkalam saran

விஜய் நடிக்கும் படத்தை கவிதாலயா நிறுவனத்துக்காக இயக்க என்னை அழைத்தனர். மும்பை தாதாவுக்கு நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ‘அட்டகாசம்’ படக் கதையை உருவாக்கினேன். தவிர்க்க முடியாத சூழலால் விஜய் நடிக்க முடியாமல்போக, அஜித்துக்காக மாற்றினேன். மும்பையை, தூத்துக்குடியாக மாற்றி அமைத்து எடுத்ததுதான்,அட்டகாசம்’ படம்.

இதையும் படியுங்க : பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் விஜய் மற்றும் விக்ரம்.! வெளியான மாஸ் தகவல்.! 

- Advertisement -

இன்றைக்கு வார கலெக்‌ஷனை வைத்தே புதுப் படங்களின் ரிசல்ட் கணிக்கப்படுகிறது. முதன்முதலில் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டதே அட்டகாசம்’ திரைப்படம்தான். அப்போது சென்னை போன்ற நகரங்களில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் 2 கி.மீ இடைவெளியில் ஒரு தியேட்டர் என்ற கணக்கில்அட்டகாசம்’ வெளியாகி ரெக்கார்டு ஆனது.

Image result for saran ajith

இதுவரை அஜித்தின் போட்டியாளர் என்று சொல்லப்படுகிற ஹீரோ ஒருநாளும் அஜித்துக்குத் தொந்தரவு கொடுத்ததில்லை. அந்த ஹீரோவுக்கு அஜித்தும் தொந்தரவு கொடுத்ததில்லை. வேறு சில ஹீரோக்கள் பலமுறை தொல்லை கொடுத்ததை நானறிவேன்.

-விளம்பரம்-

நாங்கள் இருவரும் அடிக்கடி சினிமா தியேட்டரில் மக்களோடு மக்களாக அமர்ந்து பல திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். பெரும்பாலும் அஜித் மாறுவேடத்தில் வருவார். நானும், அவரும் தியேட்டரில் சேர்ந்து பார்த்த விஜய் படம், `வில்லு’.

Advertisement