நல்லா தான இருந்தாங்க ஏன் இப்படி ? யாருனு தெரியுதா ? 2k கிட்ஸ் பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.

0
706
jonita
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிகைகளை தாண்டி ஒரு சில துணை நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது வாடிக்கை தான். ஆனால், பாடகிகள் நடிகைகளுக்கு இணையாக பிரபலமாவது அரிதான ஒன்று தான். அந்த வகையில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பல இளசுகளின் Crushஆக இருந்து வந்தனர். அவரை அடுத்து தற்போது அந்த இடத்தை பிடித்து இருப்பது இவர் தான். வேறு யாரும் இல்லை தற்போது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷனல் பெண் பாடகியாக திகழ்ந்து வரும் பின்னணி பாடகி ஜோனிதா தான்.

-விளம்பரம்-

செல்லம்மா பாடல் புகழ் ஜொனிதாவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டாக்டர். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் வெளிவருவதற்கு முன் இந்த படத்தின் செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதோடு சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலின் மூலம் ஜோனிடா காந்தி அவர்களுக்கு சோஷியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

இதையும் பாருங்க : அனுஷ்கா ஷெட்டி அண்ணனை கொலை செய்ய திட்டம், போலீசில் புகார். பின்னணியில் இவரா ?

- Advertisement -

ஜோனிதா பாடிய பாடல்கள் :

மேலும், ஜோனிட காந்தி அவர்கள் இந்தோ- கன்னடிய பாடகி ஆவார். இவர் டெல்லியில் பிறந்து இருந்தாலும் தன்னுடைய ஏழு வயதிலேயே கனடாவிற்கு சென்றுவிட்டார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தான் பாடகியாக இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் பாடினார்.

ஜோனிதாவின் லேட்டஸ்ட் லுக் :

இதற்குப் பிறகு இவர் 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா என பல படங்களில் பாடியுள்ளார். தற்போது இவர் டாக்டர் படத்தில் செல்லம்மா என்ற பாடலின் வீடியோவில் ஆடிக்கொண்டே பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் படு வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் பெரும்பாலும் அனிருத் இசையமைத்த பாடல்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவர். இறுதியாக இவரும் அனிருத்தும் இணைந்து பாடிய டான் படத்தின் ‘டார்லிங்’ பாடலும் பீஸ்ட் படத்தில் பாடிய ‘அரபிக் குத்து’ பாடலும் வேற லெவல் ஹிட் அடித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

அனிருத்தை திருமணம் செய்ய தயார் :

அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க இவர் நடிகையாக சினிமா உலகில் அவதாரம் எடுக்கப் போகிறார்.

நடிகையாக களமிறங்கும் ஜோனிதா :

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/ டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் ஜோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரரைப்போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

Advertisement