44 வயதிலும் விதவிதமான வொர்க் அவுட்டில் அசத்தும் ஜோ – சூர்யாவிற்கே Tough கொடுக்குறாரே. வாயடைத்து போன பிரபலங்கள்.

0
2296
Jyothika
- Advertisement -

இந்த வயதிலும் சூர்யாவிற்கே டப் கொடுக்கும் வகையில் ஜோதிகா செய்த உடற்பயிற்சி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் தமிழில் ஜோதிகா என்ட்ரி கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள விஜய்,அஜித்,விக்ரம்,ரஜினி,கமல், சூர்யா பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக சூர்யா- ஜோதிகா வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜோதிகா திரைப்பயணம்:

திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜோதிகா நடித்த படங்கள்:

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் உடன் பிறப்பே. இந்த படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார் பட நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து சில படங்களில் ஜோதிகா கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் நடந்த 68 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சூரரை போற்று படத்திற்காக சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. அதற்கான புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் ஜோதிகா:

இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ஜோதிகா அவர்கள் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் ஷேர் செய்து வருகிறார். இதனால் ஜோதிகாவை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் ஜோதிகா உடைய உடற்பயிற்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஜோதிகா அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்திருக்கிறார்.

ஜோதிகா ஒர்க்அவுட் வீடியோ:

பொதுவாகவே சூர்யா தான் தீவிரமாக ஒர்க்அவுட் செய்வார். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், தன்னுடைய கணவர் சூர்யாவையே மிஞ்சும் அளவிற்கு ஜோதிகா ஒர்க்அவுட் செய்திருக்கிறார். அதுவும் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்திருக்கிறார். மிக கடுமையான இந்த உடற்பயிற்சியை ஜோதிகா செய்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து டிடி, ரம்யா போன்ற பிரபலங்கள் பலரே வாயடைத்து போய் கமண்ட் செய்துள்ளனர்.

Advertisement