காட்டின் காவலன் ‘காடன்’ படத்தின் – முழு விமர்சனம் இதோ.

0
1686
kaadan
- Advertisement -

கும்கி 2 படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு யானைகள் சம்மந்தப்பட்ட கதையை எடுத்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். பிபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஜோயா, ஷ்ரியா, பிரபு சாலமன், ஷாந்தனு மொய்த்ரா கூட்டணியில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் இன்று (மார்ச் 26) வெளியாகியுள்ளது. காடு மற்றும் விலங்குகள் சம்மந்தப்பட்டு ஒரு சுற்றுச்சூழல் அக்கரை கொண்ட படமாக அமைந்துள்ள இந்த திரைப்படத்தை பற்றிய விமரிசனத்தை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

- Advertisement -

படத்தின் நாயகனான ராணா வீரபாரதி என்கிற காடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .கோயம்பத்தூருக்கு அருகில் உள்ள காட்டில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய காட்டுப் பகுதியில் லட்சம் மரங்களை நட்டு, அங்குள்ள யானைகள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் காவலனாக இருக்கிறார். காட்டில் ஒரு மரத்தை வெட்டினால் கூட காடன் விடமாட்டார். அந்த அளவிற்கும் காட்டின் பாதுகாவரலாக இருந்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் வரும் சுற்றுச்சூழல் அமைச்சர், தனது அதிகாரத்தை பயனப்டுத்தி கோல்ஃப், ஆம்பிதியேட்டர் என்று சகல வசதிகள் கொண்ட ஒரு டவுன்ஷிப்பை உருவாக்க திட்டம் தீட்டுகிறார்.

இது காட்டின் பாதுகாவலனாக இருக்கும் காடனக்கு பிடிக்காததால் தனது காட்டில் யாரையும் அனுமதிக்கவிடாமல் தடுத்து வருகிறார். இதனால் அவர் மீது போய் கேஸ் போட்டு அவரை சிறையில் அடைத்த விடுகின்றனர். அவர் சிறையில் இருக்கும் சமயத்தில், காட்டில் டவுன்ஷிப்பிறகான பணிகள் துவங்குகிறது. சிறையிலிருந்து விடுதலையாகி காட்டிற்குத் திரும்பும் காடன் மீண்டும் அந்த டவுன்ஷிப்பிற்கு எதிராக களமிறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

-விளம்பரம்-

பிளஸ் :

படத்தின் முதல் பிளஸ் என்றால் காடுகள் மற்றும் விலங்குகளின் முக்கியம்துவம் என்ன என்பதை உணர்த்த இயக்குனர் கையில் எடுத்துள்ள கதையின் மூலக்கரு. அதற்கு நிச்சயம் ஒரு கிளாப்.

படத்தில் ராணா டகுபதியின் நடிப்பு மிகவும் அருமை

குக்கி பட கிளைமாக்ஸ்ஸில் கிராபிக்ஸ்ஸில் சுதப்பிய தவறை இந்த படத்தில் குறைத்துக்கொண்டுள்ளார் இயக்குனர்.

ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் கேமரா லென்ஸ் ஒரு மிகப்பெரிய பிளஸ் இந்த படத்திற்கு.

படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் வலுவாக இருந்தாலும், இவர் முதல் பாதியில் மட்டும் தான் வருகிறார். இரண்டாம் பாதியிலும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மைனஸ் :

படத்தில் ராணா விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதியை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல தான் இருக்கிறார்கள்.இதனால் ஒரு சில கட்டத்தில் டப்பிங் படம் பார்ப்பது போல இருக்கிறது.

அவ்வளவு ஏன் தமிழ் நாட்டில் நடக்கும் கதை போல காண்பிக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் வரும் சில காட்சிகள் வட இந்தியாவை போல இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அவ்வளவு ஏன் போலீஸ் அதிகாரிகள் உடை கூட தமிழ் நாடு போலீஸ் உடை போல இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தின் ஒன் லைன் நல்ல கரு என்றாலும், திரைக்கதையில் ஸ்வாரசியத்தை பல இடங்களில் தவறவிட்டுள்ளார் பிரபு சாலமன்.

விஷ்ணு விஷால், ராணா போன்றவர்களை தவிர மற்ற கதாபாத்திரங்களின் முகம் அவ்வளவாக பதியவில்லை.

ராணா டகுபதியின் நடிப்பு பாராட்டதக்கது என்றாலும், பல இடங்களில் பிதாமகன் விக்ரமின் சாயல் அதிகப்படியாக வருகிறது. அவரை ஒரு சில காட்சிகளில் மன நோயாளி போல காட்டியது ஏன் என்பது புரியவில்லை.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார் ராணா டகுபதி.ஆனால், இரண்டு ஆண்டுகள் அப்படி என்ன இவரை பிரபு சாலமன் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை.

இறுதி அலசல் :

ஆரம்பத்தில் சொன்னது போல படத்தின் மையக்கரு மிகவும் அழகான ஒன்று. ஆனால், அதனை திரையில் சுவாரசியமாக இயக்குனர் கொடுத்தாரா என்ற கேள்விக்கு ஆம் என்றும் சொல்ல முடியவில்லை, இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. மொத்தத்தில் ‘காடன்’ தமிழ் சினிமாவில் அவதாரை மிகவும் லா பட்ஜெட்டில் நம்ம ஒரு டப்பிங் கலைஞர்களை டப் செய்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மைனா, கும்கி பிரபு சாலமன் மிஸ்ஸிங்

Advertisement