இரண்டு முறை போன் செய்த கேட்டும் சிவகார்த்திகேயன் உதவவில்லை – மன வேதனையில் சொன்ன காதல் கண்ணன்

0
737
sivakarthikeyan
- Advertisement -

சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்டும் அவர் உதவவில்லை என்று காதல் கண்ணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கண்ணன். இவர் காதல், கோ உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரை பிரபல பத்திரிக்கை சந்தித்து பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் தன்னுடைய திரைப்படம் அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருந்தது, நான் 2004ஆம் ஆண்டு வெளிவந்த காதல் படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தேன். அந்த நேரத்தில் சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்தது. அதையும் தாண்டி அந்த படம் வெற்றி பெற்றிருந்தது. அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்தது. பின் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு தான் சினிமாவுக்கு வந்தேன்.

- Advertisement -

நடிகர் கண்ணன் அளித்த பேட்டி:

அதோடு இயக்குனர் ஷங்கர் என்னுடைய தூரத்து சொந்தம் என்பதால் அவரிடம் உதவி இயக்குனராக செய்யலாம் என நினைத்தேன். அந்த உறவை வைத்து சினிமாவுக்குள் நுழைந்து விடலாம் என்று நினைத்தது தான் நான் செய்த முதல் தவறு. உறவுக்கெல்லாம் அவர் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். திறமை இருக்கிறவன் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்கு வருவான் என்று நினைக்க கூடியவர் என்று தெரிந்தது. அவருடைய அலுவலகத்தில் இருந்த ஒரு துணை இயக்குனர் தான் என்னை நடிக்க சொன்னார்.

திரைப்பயணம் குறித்து சொன்னது:

அதன் பிறகு தான் நான் நடிக்க ஆரம்பித்தேன். நான் நடித்த படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று புகழ் கிடைத்ததால் நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதேபோல் சிபாரிசு என்பது நல்ல விஷயம் தான். திறமையுள்ள ஒருவருக்கு சிபாரிசு செய்யலாம். நானும் சிவகார்த்திகேயனும் உறவினர்கள் என்பதால் நியூ இயர் மீட்டில் நாங்கள் சந்திப்போம். ரெமோ படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். முதலில் எனக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

பின் போன் பண்ணி கேட்டிருந்தேன். இப்படி இரண்டு முறை கேட்டும் அவர் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்டால் நன்றாக இருக்காது என்பதால் நானும் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு வெற்றியை தொட்ட பிறகு தான் சிலர் நம்மை அழைப்பார்கள். சினிமா துறையில் அப்படி ஒரு நிலைமை இருக்கிறது. துணை நடிகராக சின்ன புகழ் கிடைத்துள்ளது. நான் இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டி இருக்கிறது. அந்த தூரத்தை கடந்து செல்லும் போது நான் அவருக்கு நினைவுக்கு வரலாம். அப்போது அவர் கூப்பிடலாம்.

வாய்ப்பு அளிக்காத சிவா:

இதை தவறு என்று நான் சொல்லவில்லை. டாக்டர் சீட்டுக்காக ஒரு பொண்ணுக்கு உதவி செய்கிறாரே? உங்களுக்கு செய்யமாட்டாரா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்வேன். அவர் நினைத்தால் செய்ய முடியும் என்பதெல்லாம் அவருடைய மனசைப் பொறுத்தது. அதை நாம் குறை சொல்ல முடியாது. அவருடைய மனதிற்குள் நான் இன்னும் செல்லவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நான் அவர் மனதிற்குள் செல்கிற அன்றைக்கு அவருடன் இருப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement