காலா படத்தில் ரஜினி ஓட்டிய பைக் , ஜீப் பற்றி நீங்கள் அறியாத சுவாரசியமான தகவல்

0
999

கபாலி படத்திற்கு பிறகு இயக்கனுர் ரஞ்சித் ரஜினியை வைத்து இயகிவரும் படம் காலா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.படத்தின் போஸ்டர் வெளியான போது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கருப்பு ஜீப் மீது அமர்ந்திருப்பார்.அந்த ஜீப் யாருடையது ?

rajini kaala movie

மேலும் அந்த படத்தில் ரஜினி ஒரு பச்சை நிற யமஹா ஆர். எக்ஸ் 100 பைக் ஒன்றையும் பயன்படித்தியுள்ளராம்.அந்த பைக்கை இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளார்களா?? போன்ற கேள்விகளுக்கான விடைகள் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

காலா படத்தில் ரஜினி பயன்படுத்தியுள்ள ஜீப் மற்றும் பைக்கின் உரிமையாளரின் பெயர் ஆனந்த் ராமசாமி. சமீபத்தில் இவர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பெட்டியளித்திருந்தார் அதில் காலா படத்தின் சில ஸ்வரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார்.காலா படத்தில் அவர் பயன்படுத்தி மஹிந்திரா தார் என்னும் கார் மற்றும் யமஹா பைக் இவை இரண்டுமே எனக்கு சொந்தமானது தான்.ரஜினி சார் காலா படத்திற்காக அந்த ஜீப்பில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்தார்.அப்போது அவர் ஜீப் முன்புறம் இங்கே அமர வேண்டும் என்று ஒரு குறியீடு போடப்பட்டது அதனை நான் இன்னும் ரீ பெயிண்ட் செய்யாமல் அப்படியே விட்டிவிடேன்.

rajini

ரஜினி சார் ஜீப் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானதும் என்னை மஹிந்திரா கார் நிறுவனத்திலிருந்து செல்போன் மூலம் அழைத்தனர்.அந்த ஜீப்பை எங்கள் நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிரோம் ஜீப்பை விற்றுவிடுகிறீர்களா என்று கூறினார்கள். ஆனால்,நான் ஜீப்பை விற்கப்போவது இல்லை என்று தெறிவித்துவிட்டேன் ஏனென்றால் இது ரஜினி சார் உக்கார்ந்து ஜீப் இதனை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விற்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

ரஜினி சார் ஒரு பச்சை நிற பைக் ஒன்றையும் அந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார் அந்த பைக்கை யும் நான் தான் கொடுத்தேன்.இயக்குனர் ரஞ்சித் கேட்டுக்கொண்டதற்காக அந்த பைக்கை ஒரே இரவில் தயார் செய்துவிட்டேன்.

மேலும் அந்த பைக்கை ஒரு சிலர் விற்பனைக்கு கேட்டனர். பல பேர் அந்த பைக்கிற்கு பதிலாக வேறு ஒரு புதிய பைக்கை தந்து அதற்கு மேலே 1 லட்சம் பணம் தருவதாகவம் கூறினார்கள்.நான் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் இந்த தீவிர ரஜினியின் ரசிகர் ஆனந்த் ராமசாமி.