காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் படமல்ல – ஏற்கனவே இதே பாணியில் வெளியான தமிழ் படங்களின் ஹிட் படங்களின் லிஸ்ட் இதோ

0
754
kaathuvaakula
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் திரைப்பட விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து உள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் போலவே முக்கோண காதல் வடிவில் வெளியாகி ஹிட் கொடுத்த தமிழ் படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பட்டியல் இதோ,

- Advertisement -

காதல் தேசம் :

கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் காதல் தேசம்.. இப்படத்தில் வினீத் , அப்பாஸ் , தபு ஆகியோர் நடித்திருந்தனர். நண்பர்களான இரு மாணவர்கள் தங்களுடன் படிக்கும் பெண்ணை ஒரு தலையாக காதல் செய்கிறார்கள். ஒரு முக்கோண காதலாக இந்த படம் உள்ளது.

நினைத்தேன் வந்தாய் :

கே.செல்வ பாரதி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தில் தளபதி விஜய், ரம்பா , தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நாயகனான வரும் விஜய்யை ரம்பா காதலிக்கிறார். ஆனால், தேவையானியும் விஜயை காதலிக்கிறார். இருவரும் சகோதரிகள் . பின்னர் இரு சகோதரிகள் யார் யாருக்காக விட்டு கொடுக்க போகிறார்கள் என்பதே மீதி கதை

-விளம்பரம்-

உன்னை நினைத்து :

விக்ரமன் எழுதி இயக்கி 2002 ஆம் ஆண்டு வெளியன படம். இந்த படத்தில் சூர்யா , லைலா, சினேகா நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. மேலும், பல இந்திய பிராந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதோடு இந்த படம் சூர்யாவின் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 175 நாட்கள் ஓடி இந்த படம் வெள்ளி விழா விழாவைக் கொண்டாடியது.

Watch Unnai-ninaithu - Hungama Play

ஷாஜகான் :

ரவி எழுதி இயக்கிய படம் ஷாஜகான். இந்த படத்தில் தளபதி விஜய், கிருஷ்ணா, ரிச்சா பல்லோட் நடித்து உள்ளனர். நாயகன் அசோக் இரண்டு காதலர்களுக்கு உதவுகிறார். பின்னர் தானும் ஒரு பெண்ணை காதலிக்க அந்த பெண்ணை நண்பனும் காதலிக்கிறார் என தெரியாமல் அவரின் காதலுக்கு உதவுகிறார். இறுதியில் இந்த முக்கோண காதல் என்ன ஆனது என்பது படத்தின் கதை.

மௌனம் பேசியதே :

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் மௌனம் பேசியதே. இதில் சூர்யா மற்றும் த்ரிஷா, லைலா ஆகியோர் நடித்துள்ளனர். நண்பனின் உறவுக்கார பெண் த்ரிஷா தன்னை காதலிப்பதாக நினைக்கிறார் சூர்யா. பின்னர் அவர் வேறொருவரை காதலிப்பது தெரிந்து அதிர்சியடிக்கிறார். ஆனால், உண்மையில் சூர்யாவை காதலித்தது லைலா என இறுதியில் அறிகிறார் சூர்யா. இந்த படம் சூர்யாவின் கேரியரில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

Mounam Pesiyadhe Movie Full Download - Watch Mounam Pesiyadhe Movie online  & HD Movies in Tamil

மின்னலே :

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே. இந்த படத்தில் மாதவன் , அப்பாஸ் , ரீமா நடித்திருந்தனர். தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை மாதவன் என நினைக்கும் ரீமா அவரிடம் நெருங்கி பழகுகிறார். பின்னர் சில நாட்களில் ஒரிஜினல் மாப்பிள்ளை அப்பாஸ் வர மாதவனை புறக்கணிக்கிறார் ரீமா. இறுதியில் உண்மையான காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

Minnale | 42 Best Feel Good Tamil Movies Post 2000!

மின்சாரா கனவு :

ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி , பிரபுதேவா மற்றும் கஜோல் ஆகியோர் நடித்திருந்த படம் மின்சார கனவு. அரவிந்த் சாமிக்காக கன்னியாஸ்திரி ஆக விரும்பும் கஜோலின் மனதை மாற்றி திருமண ஆசையை உண்டாக்குவதற்காக பிரபு தேவா வருகிறார். பின் மெல்ல மெல்ல கஜோல் மீது காதல் வயப்படுகிறார் பிரபு தேவா. இறுதியில் கஜோல் யாரை திருமணம் செய்வார் என்பதே படத்தின் மொத்த கதை. இந்தப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயற்கை :

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் இயற்கை. இப்படத்தில் ஷாம், ராதிகா, அருண் விஜய் நடித்துள்ளனர். அருண் விஜயை காதலிக்கும் ராதிகா அவருக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார். அந்த சமயத்தில் ராதிகா இருக்கும் இடத்திற்கு ஷாம் வருகிறார். பின் ராதிகா மீது காதல் கொள்கிறார் சாம். பின்னர் ராதிகாவின் காதலை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார் ஷாம்.

ஹே சினாமிகா :

சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியிருந்த படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இந்த படமும் ஒரு முக்கோண காதல் கதை. இந்த படமும் நல்ல விமர்சங்களை பெற்று இருக்கிறது.

Update on 'Hey Sinamika' starring Dulquer Salmaan ..! || துல்கர் சல்மான்  நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் அப்டேட்..!

காத்து வாக்குல ரெண்டு காதல் :

இந்த வரிசையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இடம் பிடித்துள்ளது. இரு தோழிகளை ஒரே நேரத்தில் காதலில் விழ வைக்கிறார் விஜய் சேதுபதி. பின் நாயகனின் உண்மை முகம் வெளியான பிறகு சந்திக்கும் சிக்கல்களே இந்த படத்தின் மைய கதை என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் வந்த முக்கோண காதல் கதை படங்கள் ஹிட் ஆனது போல் இந்த படமும் வெற்றி அடையுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement