இலங்கைக்கு வந்தா துடைப்பக்கட்டை ஆசீர்வாதம்தா, மிரட்டலால் பயணத்தை ரத்து செய்த குஷ்பு – அதற்கும் அவர் உருட்டிய உருட்டு.

0
303
Kushboo
- Advertisement -

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு குஷ்பு வந்தால் துடைப்பக்கட்டையில் ஆசிர்வாதம் வழங்கப்படும் என்று விடுக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அடுத்து பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியை நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தான் தொகுத்து வழங்க இருப்பதாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் குஷ்பூவுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே குஷ்பு அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர் போராட்டம் பயங்கரவாதம் குறித்து விமர்சித்திருந்தார்.

- Advertisement -

குஷ்பூவுக்கு விடுத்த எச்சரிக்கை:

இதனாலே இலங்கைக்கு எப்போ வந்தாலும் அவருக்கு எதிராக ஈழத்தமிழர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்துவார்கள். தற்போது இலங்கை வடக்கு மாகாண கடல் தொழிலாளர் வி எம் பி சுப்பிரமணியன், நடிகை குஷ்பூ இலங்கைக்கு வந்தால் துடைப்ப கட்டை ஆசீர்வாதம் வழங்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முடிவை குஷ்பூ கைவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குஷ்பூ பதிவு:

மேலும் இது குறித்து குஷ்பூ. யாருக்கும் அஞ்சி இந்த முடிவை எடுக்கவில்லை. என் மாமியாரின் இதய அறுவை சிகிச்சையை முன்னிட்டே நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளேன் என்று கூறி இருக்கிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

குஷ்பூ திரைப்பயணம்:

பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும். பின்னர் சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார் குஷ்பூ. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

Advertisement