இதுக்கு தான் வீடியோ கால் வர சொன்னியா? கால் உடைந்த டிடியை தொல்லை செய்துள்ள தீனா.

0
1967
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தீனா. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்க போவது யாரு?’. இந்த நிகழ்ச்சியின் சீசன் 5-யில் நடிகர் தீனாவும் ஒரு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியின் மூலம் தீனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

-விளம்பரம்-

அதன் பிறகு நடிகர் தீனாவிற்கு அடித்தது மிகப் பெரிய ஜாக்பாட். ஆம். வெள்ளித் திரையில் நுழைய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது தான் ‘ப.பாண்டி’ என்ற திரைப்படம். 2017-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படத்தினை பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்திருந்தார். கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் பாருங்க : ஜோதிகா குறிப்பிட்டு பேசிய மருத்துவமனையில் சிக்கிய பல விஷப்பாம்புகள், ஒருவர் பலி- வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இதில் இரண்டாம் பாதியில் நடிகர் தீனா வலம் வந்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தர்ஷனின் ‘தும்பா’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் நடிகர் தீனா. இதில் ‘கைதி’ படத்தில் தீனாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இப்போது ‘மாஸ்டர்’ என்ற படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் தீனா. இந்த படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

நடிகர் தீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘எங்கிட்ட மோதாதே’ என்ற ரியாலிட்டி கேம் ஷோவை பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியுடன் இணைந்து தொகுத்து வழங்கியிருந்தார். சமீபத்தில் தான் டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். இப்போது, இந்த லாக் டவுன் டைமில் திவ்யதர்ஷினியிடம் வீடியோ கால் பேசியிருக்கும் தீனா அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

‘எங்கிட்ட மோதாதே’ ஷோவின் புகைப்படம் ப்ளஸ் இப்போது வீடியோ காலில் இருவரும் பேசிய புகைப்படமும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு “எக்ஸ்பெக்டேஷன் vs ரியாலிட்டி.. எப்டி இருந்த நம்ம இப்டி ஆகிட்டோம் பார்த்தீங்களா திவ்யதர்ஷினி அக்கா” என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் தீனா. இதனை பார்த்த திவ்யதர்ஷினி “கம்முனு இரு.. உனக்கு ஆங்கரிங் சொல்லி தரலாம்னு ஷோவுல சேர்த்தா, கடைசில என்ன சப்பாத்தி சொல்லி கொடுங்க அக்கா-ன்னு கேக்குற.. இதுக்குதான் பாசமா வீடியோ கால் வர சொன்னியா?” என்று கமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்.

Advertisement