‘மத ரீதியா பேசுனது கஷ்டமா இருக்கு’ – கதாநாயகி டைட்டில் வின்னர் ரூபினா, ரூபிசீனா வருத்தம்.

0
1986
Kathanayagi
- Advertisement -

மதரீதியாக எங்களை பேசி கஷ்டப்படுத்தினார்கள் என்று கதாநாயகி டைட்டில் வின்னர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா நடுவர்களாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி மூலம் அடுத்த கண்ணம்மா, அடுத்த பாக்யா யார் என்ற தேடலுக்கான நிகழ்ச்சி. இதில் வெற்றி பெறும் நபர்களை வைத்து சீரியல் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை குரேஷி, பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கடுமையான போட்டிகள் நடந்தது.

- Advertisement -

கதாநாயகி நிகழ்ச்சி:

மேலும், கதாநாயகி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற இரட்டை சகோதரிகள் ரூபினா மற்றும் ருபிசினா தான் டைட்டில் வின்னர். இவர்களுடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இவர்கள் டைட்டில் வின்னர் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கதாநாயகி நிகழ்ச்சியின் டைட்டில் வெற்றி பெற்றது குறித்து இரட்டை சகோதரிகள் பேட்டியில் கூறியிருப்பது, நீண்ட நாட்களாக நாங்கள் கனவு கண்ட ஒரு விஷயம் இன்று நினைவாகி இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.

ரூபினா மற்றும் ருபிசினா அளித்த பேட்டி:

எங்களை கதாநாயகி நிகழ்ச்சி செதுக்கி விட்டது என்று தான் சொல்லணும். இங்கு வந்த பிறகு ஆக்டிங்கில் எத்தனை விஷயம் இருக்கு என்பதை தெரிந்து கொண்டோம். எங்களுக்கு ஆக்டிங் சார்ந்த நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொடுத்தது இந்த மேடைதான். முதன் முதலில் அந்த மேடையில் நின்ற போது அந்த பெரிய மேடை லைட்டிங் எல்லாமே பயமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் மேடை ஏறும்போது இது எங்களுக்கான மேடை நன்றாக பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் நடிப்போம். எங்களுக்கு டான்ஸ் மூலமாகத்தான் நடிப்பில் ஆர்வம் வந்தது.

-விளம்பரம்-

நடிப்பு குறித்து சொன்னது:

டான்ஸ் ஆடும் போது எக்ஸ்பிரஷன் கொடுத்து சிரித்துக்கொண்டே ஆடுவோம். அதுதான் நடிப்பிற்கான தொடக்கப்பள்ளி. துடிக்கும் கரங்கள் இயக்குனர் வேலுதாஸ் அண்ணா எங்களை பார்த்த உடனே அந்த படத்தில் நடிக்க செலக்ட் பண்ணிட்டார். எங்களுக்கு ஆடிஷன் எதுவுமே பண்ணவில்லை. எங்க மேல அவருக்கு என்ன நம்பிக்கை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால், அங்கு சொல்லிக் கொடுத்த மாதிரி நடித்துவிட்டோம். அந்த படம் தான் நடிப்பில் இன்னும் நிறைய கத்துக்கணும் என்ற ஆர்வத்தை கொடுத்தது. அம்மாவிடம் இந்த துறையில் பயணிக்க விரும்புகிறோம் என்று சொன்னதும் அவர்கள் சப்போர்ட் செய்தார்கள்.

மதம் சர்ச்சை குறித்து சொன்னது:

அதேபோல் மதத்தை வைத்து பேசுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நடிப்பு என்பது திறமை சார்ந்த விஷயம். மதரீதியாக எங்களை பேசுவது எங்களை ரொம்பவே காயப்படுத்திச்சு. கொஞ்ச நாள் அதை நினைத்து அழுதோம். எல்லோரும் உங்களை எத்தனை பேர் லவ் பண்றாங்க, சப்போர்ட் பண்றாங்க அதை பாருங்கள் என்று ஆறுதலாக சொன்னார்கள். இப்ப எதுனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் எங்களுக்குள் வந்து விட்டது. இதுவரைக்கும் மூன்று படங்கள் செய்திருக்கிறோம். மூன்று படத்திலும் சேர்ந்து நடித்தோம். சீரியலிலும் இரண்டு பேர் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றாலும் தனித்தனியாக நடிக்கலாம் என்று நாங்கள் ரெடி. கிடைக்கிற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.

Advertisement