சர்ச்சையில் சிக்கிய அஸ்வினுக்கு ஆதரவாக கைதி, மாயா பட தயாரிப்பாளர் போட்ட பதிவு.

0
266
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வினுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் ட்வீட் செய்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் கடந்த இரன்டு நாட்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : படம் எடுக்கறன்னு போய்டு, என்னால முடியலன்னு மீண்டும் என்கிட்ட வந்தான் – தன்னிடம் வேலை பார்த்த ரஞ்சித் குறித்து வெங்கட் பிரபு

- Advertisement -

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறி இருந்தார். அஸ்வினின் இந்த பேச்சை பல சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் விமரித்து வரும் நிலையில் தமிழில் கைதி, மாயா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த எஸ் ஆர் பிரபு, அஸ்வினுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!’ என்று அஸ்வினுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement