படம் எடுக்கறன்னு போய்டு, என்னால முடியலன்னு மீண்டும் என்கிட்ட வந்தான் – தன்னிடம் வேலை பார்த்த ரஞ்சித் குறித்து வெங்கட் பிரபு

0
294
pa-ranjith
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான். ஷங்கர் துவங்கி இளம் இயக்குனர்கள் வரை பலரும் ஆரம்ப காலத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான் அப்படி துணை இயக்குனர்களாக பணியாற்றிய போது படங்களில் கூட தலை காண்பித்து உள்ளனர். அந்த வகையில் ப ரஞ்சித்தும் துணை இயக்குனராக பணியாற்றிய போது படத்தில் தோன்றியவர் தான்.

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இறுதியாக இவர் இயக்கிய ‘சார்பட்டா’ படம் மாபெரும் வெற்றியடைந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-69.jpg

இந்த நிலையில் ரஞ்சித் சென்னை 28 படத்தின் போது தன்னுடன் வேலை பார்த்தது குறித்தும் அதன் பின்னர் அவர் படங்களை இயக்க சென்றுவிட்டு பின்னர் மீண்டும் மங்காத்தா படத்தின் போது தன்னிடம் மீண்டும் உதவி இயக்குநராகவே சேர்ந்துகொள்ள கேட்டது பற்றியும் பேசியுள்ளார் வெங்கட் பிரபு. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement