என் கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழட்டி – உதவி இயக்குனர் செய்த செயல் குறித்து காஜல் அகர்வால்

0
288
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனிடையே காஜல் அவர்கள் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்து 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் நடந்து இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

- Advertisement -

காஜல் குறித்த தகவல்:

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். மேலும், அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தெலுங்கி பாலைய்யா நடிப்பில் வெளிவந்த படத்தில் காஜல் நடித்து இருந்தார். தற்போது இவர் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தில் நடித்து இருக்கிறார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது.

காஜல் நடிக்கும் படம்:

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை அடுத்து வேறு சில படங்களில் காஜல் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்த ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் நான் இருந்த கேரவனுக்குள் நுழைந்து விட்டார்.

-விளம்பரம்-

காஜல் பேட்டி:

பின் அந்த நம்பர் தன்னுடைய சட்டையை கழட்டி அவருடைய இதயத்திற்கு மேல் என்னுடைய பெயரை பச்சை குத்தி இருந்ததை காட்டினார். அவர் அப்படி செய்திருந்ததை பார்த்து நான் பயந்து விட்டேன். அவர் என் மீது வைத்திருந்த அன்பு புரிந்தது. ஆனால், அவர் வெளிப்படுத்திய விதம் தான் தவறு. சூட்டிங் முடியும் வரையுமே நான் பயந்து கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement