திருமணம் முடிந்த 2 நாளில் காஜல் எடுத்த அதிரடி முடிவு – என்னனு நீங்களே பாருங்க.

0
914
kajal
- Advertisement -

திருமணம் முடிந்து இரண்டு நாளே ஆன நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் விஷயத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது திருமணம் பற்றிய அதிகார பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தார் காஜல் அகர்வால். இதுகுறித்து தனது சமூக வளைத்தளத்தில் தெரிவித்திருந்த காஜல் அகர்வால், தனக்கு வரும் 30 ஆம் தேதி மும்பையில் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமணத்திற்கு பின்னரும் தான் கண்டிப்பாக நான் விரும்பும் வேலையை தொடர்ந்து செய்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்றும் கூறி இருந்தார்.

காஜல் அகர்வாலின் திருணம் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வாலின் திருமண புகைப்படம் வெளியாகிஇருந்தது. காஜல் அகர்வாலுக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். மேலும், ட்விட்டரில் காஜல் அகர்வால் ஹேஷ் டெக் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

திருமணம் முடிந்த உடனே புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம், ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement