நேர்மைக்குப் பெயர் பெற்ற கக்கனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது – கக்கனாக நடிப்பது யார் தெரியுமா ?

0
2475
Kakkan
- Advertisement -

கக்கனின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்து தயாரிப்பாளர் ஜோசப் பேபி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படங்கள் பல வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் காமராசர், காந்தி, பெரியார் தந்தை போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கக்கன் வாழ்க்கை வரலாற்றை படம் தயாரிக்கப்படுகிறது.

-விளம்பரம்-

எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக இருந்தவர் கக்கன். இவர் விடுதலை வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், தமிழக பொதுப்பணித்துறை என பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாற்றை தான் படமாக எடுக்கிறார்கள். இந்த படத்தில் கக்கன் என்ற கதாபாத்திரத்தில் ஜோசப் பேபி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் கக்கன் திரைப்படம் குறித்து ஜோசப் பேபி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படம் எனக்கு 30 வருஷம் தவம் என்று சொல்லலாம். என்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில். ஆனால், நான் கோவையில் செட்டில் ஆகிவிட்டேன். கக்கன் தயாரிப்பதற்கு முன்னர் நான் சினிமாவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள விரும்பினேன். நான் சில படங்களை தயாரித்தேன்.

நான் என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன் ஆகிய தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் கன்னடத்திலும் சில படங்களை தயாரித்தேன். அதற்குப்பின் தான் நான் கக்கன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தேன். இதில் நான் கக்கன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என்னுடைய பாக்கியம். காமராஜரின் அமைச்சர் அவையில் இருந்தவர் தான் கக்கன். இவர் நேர்மையான அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர். அவருக்கு வரும் பரிசுகள் எல்லாம் தனக்கு சொந்தமானது இல்லை என்று சொல்லுவார்.

-விளம்பரம்-

அப்படி ஒரு முறை மலேசியா அமைச்சர் ஒருவர் அவருக்கு தங்க பேனா ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். அதை கூட அவர் வாங்க மறுத்துவிட்டு வாழ்ந்த எளிமையான அரசியல்வாதி. அவர் தெய்வீகமான ஒரு மனிதர் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கை படமாக எடுத்திருப்பது நான் செய்த புண்ணியம். இந்த படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியது மட்டுமில்லாமல் கக்கனாகவும் நான் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கியிருக்கிறார். தேவா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெங்கி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கக்கனின் முழு வரலாற்றையும் இந்த படத்தில் சொல்லியிருக்கோம். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தவிர கக்கன் பிறந்து வளர்ந்த தும்பைப்பட்டி ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அவரது கிராமத்தில் படப்பிடிப்பு நடந்த போது அந்த கிராம மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் உதவியும் என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்

Advertisement