இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்பவர் கலா மாஸ்டர். இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை பல பாகங்களாக கொண்டு சென்றார்கள். மேலும், இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் என்ற சொல்லலாம். இவருடைய மைத்துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்தது.
இவர் தன்னுடைய 12 வயதிலிருந்து நடன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடன இயக்குனராக அறிமுகமானார்.பின் 30 வருடத்திற்கு மேலாக இந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக பங்கு வகித்து வருகிறார். இவருடைய சகோதரி பிருந்தாவும் பிரபல நடன இயக்குனர் ஆவார்.
மேலும், கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் ஆகிய பல மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் கலா மாஸ்டர். இதனிடையே இவர் கோவிந்தராஜன் என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் கலா மாஸ்டர் 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வித்யுத் என்ற மகன் இருக்கிறான். இவருக்கு இந்த பெயரை வைத்தது கேப்டன் தான். கேப்டனுக்கு கலா மாஸ்டர் மிகவும் நெருக்கம். நடிகர் சங்கம் கடனில் இருந்த போது வெளிநாட்டில் கலை நிகழ்ச்சியை நடத்தினார்.
அந்த கலை நிகழ்ச்சியில் நடன ஆசிரியராக இருந்து அந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக இருந்தது கலா மாஸ்டர் தான். கேப்டனின் இறப்பின் போது கூட கண் கலங்கி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார் கலா மாஸ்டர். இப்படி ஒரு நிலையில் கலா மாஸ்டர் மகனின் பிறந்தநாளை ஒட்டி தே.மு.தி.க தலைவர் பிரேமலதா அவருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த வீடியோவை பதிவிட்டுள்ள கலா மாஸ்டர் தனது மகன் பேசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘ ஹாய், இது வித்யூத். எனது பிறந்தநாளில் பிரேமலதா மேடம் மற்றும் கேப்டன் விஜயகாந்த் சார் ஆகியோரிடமிருந்து இந்த பரிசைப் பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்குப் பெயர் வைத்த கேப்டன் சார்தான் இந்தப் பரிசு கிடைத்தது எனக்குக் கிடைத்த உண்மையான மரியாதை. இதற்கு மிக்க நன்றி பிரேமலதா மேடம், அதே போல் கேப்டனுக்கும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.