அட, கலாப காதலா படத்தில் நடித்த கண்மணிய ஞாபகம் இருக்கா – அவங்க தான் இந்த சீரியல் நாயகியா.

0
3956
- Advertisement -

கலாபக் காதலன் நடிகை கண்மணி சீரியலில் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர் நடிப்பில் பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில் ஆர்யா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கலாபக் காதலன். இந்த படத்தை விஷ்ணு டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யா, ரேணுகா மேனன், அக்ஷயா, இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். தன்னுடைய அக்காவின் கணவனை விரும்பும் தங்கையின் கதை குறித்த படம். இந்த படத்தில் கதாநாயகியின் தங்கையாக வில்லியாக நடித்திருந்தவர் நடிகை அக்ஷயா ராவ். இவர் பிரபல நடிகை சாயாதேவியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அக்ஷயா ராவ் குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் பார்த்திபன் கனவு, சகா, மனசுக்குள்ளே, மதராசி, கலாபக் காதலன், பழனியப்பா கல்லூரி, கஜா, எங்கள் ஆசான் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய பெயரை எடுத்து தந்தது ஆர்யாவின் கலாபக் காதலன் படம் தான். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவருக்கு பெரிதாக படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தற்போது இவர் சின்னத்திரை சீரியலில் களமிருக்கிறார்.

சந்தியா ராகம் சீரியல்:

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புது தொடர் சந்தியா ராகம். இந்த தொடரில் ஜானகி -சந்தியா என்ற இரு சகோதரிகள் இருக்கிறார்கள். இதில் தன்னுடைய அக்கா ஜானகிக்கு பார்க்கும் மாப்பிள்ளையை தங்கை சந்தியா திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். பின் சந்தியாவை அவமானப்படுத்தி அவருடைய அப்பா வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

அதற்கு பிறகு சந்தியா தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய சகோதரி ஜானகியை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஜானகி தன் தங்கை சந்தியாவை நினைத்து வருத்தப்படுகிறார். பின் சந்தியா- ஜானகி இருவரும் சந்திப்பார்களா? அடுத்து என்ன நடக்கும் என்பது தான் சீரியலின் கதை.

சீரியலில் அக்ஷயா:

இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் தான் நடிகை அக்ஷயா ராவ் நடித்திருக்கிறார். இன்று முதல் சந்தியாராகம் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரின் மூலம் அக்ஷயா ராவ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement