டிவிட்டர்ல பெருசு பெருசா பேசுறவரோட வீரம் எங்க போச்சு – சித்தார்த்தை கேலி செய்த கஸ்தூரி

0
2633
Kasthuri
- Advertisement -

சித்தார்த் வீரம் எங்கே போனது? என்று நடிகை கஸ்தூரி அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே 13 கோடிக்கு மேல் வசூல் நாட்களிலேயே கூறப்படுகிறது.

- Advertisement -

சித்தா படம் பிரஸ்மீட்:

அது மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் ப்ரமோஷன் பணிகளில் சித்தாத் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பெங்களூரில் சித்தா படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்து கொண்டிருந்தார். அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இருந்தாலும், முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு சித்தார்த்தை வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர்.

கன்னட அமைப்பு செய்த வேலை:

இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்டு பதிவு போட்டிருந்தார்கள். இதன் மூலம் இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், சித்தார்த்தை வெளியேற்றி விட்டார் என்று எல்லோரும பேசுகிறார்கள்.

-விளம்பரம்-

கஸ்தூரி அளித்த பேட்டி:

அங்கு அவர் ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தானே வந்தார்கள். அவர் காங்கிரஸ், திமுக கட்சிக்கும் தானே ஆதரவு கொடுக்கிறார். அங்கே அந்த அரசாங்கம் அவரை அம்போன்னு அவரை விட்டுவிட்டது. இன்னைக்காவது அவருக்கு அது உரைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அவர் நல்ல மனிதர். தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் படத்தை வெளியிட்டது. அதற்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். ஆனால், கர்நாடகாவில் பிரஸ்மீட்டில் ஒரு போலீஸ் கூட அவருக்கு துணையாக இல்லை. அவ்ளோ பெரிய கும்பல் வந்து மிரட்டுகிறது. ஒரு மாநில ஆதரவு இல்லாமல் அந்த கும்பல் அப்படி செய்து இருக்க முடியாது. ஒரு போன் பண்ணி இருந்தால் கூட போலீஸ் வந்திருக்கும்.

சித்தார்த் குறித்த விமர்சனம்:

இதே ட்விட்டரில் பெருசு பெருசா பேசுபவர். எங்கே போச்சு அவருடைய வீரம்? அப்படியே அமைதியா ஒடுங்கி பதுங்கி எழுந்து வந்து விட்டார். காரணம் அவர் தயாரிப்பு நிறுவனம் பெயர் டேமேஜ் ஆக கூடாது என்று தான். இப்ப வந்து படத்தை பாருங்க, படத்த பாருங்க என்று சொன்னால் நியாயமா? அவர் அங்கே நின்று தமிழ்நாட்டிற்கும். காவிரி பிரச்சனைக்கும் குரல் கொடுத்து பேசியிருந்தால் கண்டிப்பாக அவரை பற்றி இந்தியா முழுவதும் பேசியிருப்பார்கள். படம் நல்லா இருக்கோ, இல்லையோ. எல்லோரும் படம் பார்த்து இருப்பார்கள். சரியான இடத்தில் தன்னுடைய வீரத்தை காண்பிக்காமல் தப்பான செயல்களுக்கு அவர் காண்பிக்கிறார் என்று பேசி இருக்கிறார்.

Advertisement