கலக்கப்போவது யாரு சிங்கப்பூர் தீபனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள். வைரலாகும் புகைப்படம்.

0
22063
singapore-deepan

சிரிச்சா போச்சு நிகழ்ச்சி நாட்டாமை சிங்கப்பூர் தீபனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளது. நடிகர் தீபன் வாழ்க்கையை பற்றி தான் பார்க்க போகிறோம்…. “சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் புகழ் சிங்கப்பூர் தீபன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய காமெடிக்கு பஞ்சமே இல்லை. தீபன் அவர்கள் முதன் முதலாக தனியார் பேங்கில் எக்சிகியூடிவ் ஆக பணிபுரிந்து இருந்தார். பின்னர் தான் மேடை நிகழ்ச்சியில் தான் தன்னுடைய நகைச்சுவை திறமையை காண்பித்து வந்தார். பின்னர் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ‘கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியும் ‘ ஒன்று. இந்த நிகழ்ச்சி மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றதனால் தான் சீசன் 1, 2 ,3 என 10க்கு மேல் தாண்டி செல்கிறது. அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் தான் சிங்கப்பூர் தீபன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சிங்கப்பூர் தீபன் என்ற பட்டப் பெயரே வந்தது. ஆனால், அது ஏன்? வந்தது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் ‘அது இது எது’ என்ற ஒரு ரியாலிட்டி கேம் ஷோவில் சிரிச்சா போச்சு என்ற ஒரு சுற்று வைப்பார்கள். அந்த சிரிச்சா போச்சு சுற்று பற்றி சொல்லவே வார்த்தை இல்லை. ஏன்னா, அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்த நிகழ்ச்சி. முதலில் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்தவர் தான் நம்ப சிவகார்த்திகேயன். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் தீபன் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இயக்குனர் மீது புகார் அளித்த அசுரன் பட நடிகை மஞ்சு வாரியார். கைது செய்த போலீசார்.

அதுவும் அவருடைய நாட்டாமை கெட்டப்பில் பண்ண காமெடி எல்லாம் இன்று வரையும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு பின் 2018 ஆம் ஆண்டு ‘ஏண்டா தலையில என்ன வைக்கல’ என்ற படத்தில் நடித்து உள்ளார். அதுக்கு முன்னாடியே இவர் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து உள்ளார். இவருடைய வாழ்க்கைக்கு சரியான அங்கீகாரம் கொடுத்தது என்று பார்த்தால் சிரிச்சா போச்சு தான். இப்படி போய்க் கொண்டிருக்கும் போது இவருக்கு சுகன்யா என்பவருடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இவர்களுடைய காதலுக்கு இருவர் வீட்டிலும் கிரீன் சிக்னல் வாங்கினார்கள். ஒருவழியாக இவர்கள் திருமணம் செய்து கொண்டு டிவி, சினிமா என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். இவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என கூறிய நாளிலிருந்தே இவர்கள் ஒரு பையன், ஒரு பொண்ணு என சொல்லிவிட்டார்கள். அதோடு நிறுத்தி வைக்காமல் அந்த குழந்தைகளுக்கு பேரையும் வைத்து, துணிகளையும் வாங்கி வைத்தார்களாம். அவர்கள் நினைத்தது போலவே தற்போது ஒரு பெண்,ஒரு ஆண் இரண்டு அழகான குழந்தைகள் பிறந்து உள்ளது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது எல்லாம் என் குழைந்தைகள் பிறந்த நேரம் தான் என்று கூறிஉள்ளார்.

Advertisement