4 வருட உழைப்பு, 600 கோடி பட்ஜெட், பல ஸ்டார்கள் – எப்படி இருக்கிறது ‘கல்கி’ – முழு விமர்சனம் இதோ

0
164
- Advertisement -

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கல்கி’. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியிருக்கும் கல்கி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தின் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போரை காண்பிக்கிறார்கள். அதில் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா போரிடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், அஸ்வத்தமாவிற்கு சாகாத வரத்தை கொடுத்து விடுகிறார்.

- Advertisement -

பின் உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அப்போது தான் உன்னுடைய சாபம் நீங்கும் என்று கிருஷ்ணன் கூறுகிறார். இப்படி இந்த மகாபாரதப் போர் முடிந்த 6000 ஆண்டுகள் பிறகு தான் கல்கி படத்துடைய கதை துவங்குகிறது. உலகத்தின் முதலும் கடைசி நகரமாக மிஞ்சி இருப்பது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் கமலஹாசனின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கங்கை நதி வற்றி பஞ்சத்திலும் பசியிலும் மக்கள் வாழ்கிறார்கள். மறு பக்கம். அதிகாரம் செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பாக, தங்களுக்கான உலகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இடத்திற்குள் புகுந்து தனக்கு தேவையான பணத்தை சேர்ந்து தானும் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஹீரோ பிரபாஸ் நினைக்கிறார். கமலஹாசனின் அரசை அளித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கி.

-விளம்பரம்-

கல்கி ஆக பிறக்கும் குழந்தையை தான் தீபிகா படுகோன் சுமக்கிறார். எப்படியாவது அந்த குழந்தையை அளித்து ப்ராஜெக்ட் கே என்ற தன்னுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்று கமலஹாசன் துடிக்கிறார். ஆனால், அந்தக் குழந்தையை காப்பாற்றி தன்னுடைய சாபத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டு காலமாக அஸ்வத்தாமா காத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று பிரபாஸ் நினைக்கிறார்.

இறுதியில் அஸ்வத்தாமா தனது சாபத்திலிருந்து மீண்டாரா? கமலஹாசனின் ப்ராஜெக்ட் கே திட்டம் என்ன? பிரபாஸின் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை. அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கல்கி படம் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தினுடைய பெரிய பலமே VFX காட்சிகள் தான். நிறைய பணம் செலவிட்டு திறமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். புராண கதையை சயின்ஸ் பிக்சன் வகையோடு இணைத்து எல்லாருடைய எதிர்பார்ப்பையும் இயக்குனர் பூர்த்தி செய்திருக்கிறார்,

இருந்தாலும், புகழ்பெற்ற பல ஹாலிவுட் படங்கள் உடைய சாயல்களை சில இடங்களில் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. அறிவியலையும் கற்பனையும் இணைத்து வைத்திருப்பது தான் கல்கியின் சிறப்பு. மேலும், படத்தில் ஆரம்பத்தில் வரும் குருச்சேத்திர போர் காட்சிகள் தொடங்கி கிளைமாக்ஸ் வரை வியக்க வைக்கும் வகையில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன் உடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் பிரபாஸ் மிரட்டி எடுத்து இருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் தான் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்துக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் தான் கமலஹாசனை பார்க்க முடிகிறது. ஆனாலும், அவருடைய கதாபாத்திரம் மிரட்டி இருக்கிறது. இரண்டாம் பாதியில் கமலுடைய காட்சிகள் கண்டிப்பாக மிரள வைக்கும். படத்தினுடைய மொத்த கருவையும் தீபிகா படுகோன் சுமந்து சென்றார் என்று சொல்லலாம்.

ஆக்சன் காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதாபாத்திரங்களின் உணர்ச்சி மூலம் கதையை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பாகத்தின் உடைய கதை உலகத்தை நமக்கு புரிய வைப்பதற்கான இடத்தைக் கொடுத்திருக்கிறது. கடைசியில் ப்ராஜெக்ட் கே என்றால் என்ன? என்ற மர்மத்தோடு முடித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.மொத்தத்தில் கல்கி ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

நிறை:

அமிதாப்பச்சனின் நடிப்பு சிறப்பு

நடிகர்கள் தங்களது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம், அதை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது

படத்தின் விஎப் எக்ஸ் காட்சிகள் சூப்பர்

இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது

இரண்டாம் பாதியில் பிரபாஸின் உடைய காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

சில இடங்கள் ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்துகிறது

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் கல்கி – எதிர்பார்ப்பு

Advertisement