மழையால் தத்தளித்த சென்னை, வைரலான பத்தல பத்தல பாடல் வரிகள் குறித்து கமல் கூறிய விளக்கம்.

0
473
- Advertisement -

கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

-விளம்பரம்-

சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். சில தினங்களுக்கு முன் தான் காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக கமலஹாசனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கமல் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவரிடம் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலில் ஏரி குளம் விற்று பிளாட் போட்டு வீடு கட்டுகிறார்கள் என்ற விமர்சனத்திற்குரிய வரி வந்திருக்கும்.

பத்தல பாடல் குறித்து சொன்னது:

இது குறித்து உங்கள் கருத்து என்று கேட்டதற்கு கமல், உங்களுடைய கருத்துக்களை தான் நான் அந்த பாடலில் சொன்னேன். தனியாக கமலஹாசன் கல்வெட்டில் செதுக்கியது கிடையாது. ஏரி, குளங்கள் எல்லாம் பிளாட் போட்டு விற்கும் போது அது என்ன என்று விசாரித்து தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். வீடு கிடைத்தால் போதும் என்று அதன் மேலே மணல், கல்லை போட்டு வீடு கட்டிக்கொண்டு அதற்குப் பிறகு அரசாங்கத்தை குறை சொல்வது தவறில்லை.

-விளம்பரம்-

புயல் நிவாரண உதவி:

இதற்கு எல்லாருமே தான் காரணம். அதை நம்மால் என்ன சரி செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர குறை சொல்லி இருக்க வேண்டிய நேரம் இது கிடையாது. ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் எல்லா உதவிகளும் அரசாங்கமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. உடனடியாக செய்ய வேண்டும் என்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

அரசாங்கம் குறித்து சொன்னது:

நான் அதிமுக, திமுக என்று எந்த கட்சியை பற்றியும் பேசவில்லை. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது எந்த புயலாக இருந்தாலும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். அதற்குப் பிறகு உங்களுடைய குறைதீர்க்கும் படலத்தை மக்கள் நீதி மையம் கட்சியில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். தற்போது கமல் பேசி இருக்கும் இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement