கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர சொல்லி அப்பாஸை அளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்த நடிகர்கள் தான். அந்த வரிசையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.
இவர் 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. இவர் சிறு வயதில் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள்.
அப்பாஸ் திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார். இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் இவருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது. அதன் பின்னரும் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் அப்பாஸ் நடித்து வந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார்.
Actually I am in touch with only a few of them#KamalHaasan sir got in touch with me and asked me if I wanted to be in bigboss
— Nammavar (@nammavar11) August 3, 2023
Actor Abbas ❤️ pic.twitter.com/rX2uZY8LJ9
இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ராமானுஜர் என்ற படத்திலும், பச்சை கலியன் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் அப்பாஸ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, நான் என்னுடன் நடித்த நடிகர்களுடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறேன்.
கமல் குறித்து சொன்னது:
அதில் பல பேரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கூட நடிகர் கமலஹாசன் அவர்கள் எனக்கு போன் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாயா? என்று கேட்டார். எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொன்னேன். காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் எல்லாம் நம்மால் இருக்க முடியாது. நான் எப்போதும் துருதுருவாக இருப்பேன். வெளியே சென்று வந்து கொண்டிருப்பேன்.அதனால் மூன்று மாதமெல்லாம் அந்த வீட்டில் என்னால் அடைந்து இருக்க முடியாது. அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி இருந்தார். தற்போது இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது
பிக் பாஸ் நிகழ்ச்சி:
இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. இதுவரை ஆறு சீசன்களை கடந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.