மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்கு மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது
விஜய் பிரதீப் பிரச்சனை:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதீப் மற்றும் விஜய் வர்மா இருவருக்கும் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மனஸ்தாபமுடைய போட்டியாளர்கள் பற்றி பேசினர். அப்போது விஜய் வர்மா பேசுகையில் ‘பிரதீப் என் மீது ஷூவை இடித்துவிட்டு போனார். எனக்கு திடீரென்று கோபம் வந்து நான் கையை ஓங்கினால் ‘மூக்கு வாய் எல்லாம் உடைந்துவிடும். என் மீது பாசம் பசங்க எல்லாம் வெளியில் இருக்கிறார்கள். நீ வெளியில் போனால் ஏதாவது பண்ணிவிடுவார்கள் என்று மிரட்டினார்.
உடனே விஷ்ணு ‘உன்னை நான் செருப்பால தட்டிவிட்டுட்டேன் முடித்தால் என்னை அடி என்று சொல்ல நீ செருப்பால தட்டி பாரு என்று விஜய்யும் கூறினார். இந்த விஷயம் தொடர்பாக பவா செல்லத்துரை உட்பட அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், ரசிகர்கள் கூட இப்படி அடாவடியாக மிரட்டும் தோனியில் பேசும் விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் கமல் இதுகுறித்து பேசி இருக்கிறார்.
கமல் எச்சரிக்கை
இந்த சீசனின் ஆரம்பத்தில் தொடங்கிய ஒரு வாரத்திலேயே போட்டியாளர் ஒருவருக்கு yellow card என்னும் முதல் ஸ்ட்ரைக் வழங்கப்பட்டது. அதில் கமல் கூறியது விஜய்க்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் முழங்கையை தூக்கி அடித்து மூக்கு உடைந்து விடும் வெளியே எனக்கும் ஆள் இருக்கிறது. வெளியே வந்து பார்த்துக் கொள்வேன் என விஜய் பிரதீப் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து ஒன்றை கூறியிருந்ததை அதை கமல் அங்கு திரையில் பேசிக் கொண்டிருக்கும் போது நான் அது போல் செய்யவில்லை என்று விஜய் கூறவே இதற்கு குறும்படம் இருக்கின்றது.
நீங்கள் உங்களுக்கு முதல் ஸ்ட்ரைக் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதுபோல நீங்கள் மூன்று ஸ்ட்ரைக் வாங்கினால் இனி அங்கு இருக்கத் தேவையில்லை என்னுடன் வந்து பேசிவிட்டு எங்கள் வீட்டிற்கு கிளம்பி செல்லலாம் என்றும் கமல் கூறி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இதுவரை ரெட் கார்ட் பெற்று மஹத் தான் முதல் ஆளாக வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் பெண்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சரவணன் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதே போல முதல் சீஸனில் பரணி, 3 ஆம் சீசனின் மதுமிதா, 5 ஆம் சீசனில் நமீதா மாரிமுத்து என்று எத்தனையோ பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டு இருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.