கை கால் பிடித்தவருக்கு எல்லாம் இந்த பதவியா ? ரஞ்சிதா மீது அதிருப்தியில் கைலாசா சீடர்கள்

0
1844
- Advertisement -

கைலாசாவில் ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் குறித்து சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருடைய ஆசிரமங்கள் உள்ளன. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. அதோடு நித்தியானந்தா என்றாலே நமக்கு நினைவில் வருவது நடிகை ரஞ்சிதா தான்.

-விளம்பரம்-

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான நித்யானந்தா படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. ஆனால், இவர் சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். ரஞ்சிதா சேர்த்து வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆனது. அதன் பின்னர் வேறு வழியின்றி அந்த ஆசிரமத்திலேயே செட்டில் ஆனார். தற்போது நித்தியானந்தா தனியாக தனக்கென ஒரு தீவை உருவாக்கி கைலாசம் என்று பெயர் வைத்து இருக்கிறார்.

- Advertisement -

கைலாச நாடு:

கைலாச எனும் ஒரு தனி நாடு ஒன்றை உருவாக்கி விட்டதாக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நித்தியானந்தா வெளியிட்டிருந்தார். கைலாச நாடு என்பது சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுவதும் வாழும் இந்துக்களுக்கான நாடு என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கைலாச நாட்டிற்கென ஒரு தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள், சீடர்கள் என அனைத்தும் இருக்கிறது. தற்போது கைலாச சார்பில் பல நாடுகளில் தூதர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாச சார்பில் பெண் சீடர் ஒருவர் கலந்து இருந்தார்.

கைலாச நாட்டின் பிரதமர்:

அதற்குப்பின் நித்தியானந்தா அவர்கள் அமெரிக்காவில் சிஸ்டர் சிட்டி என்ற பெயரில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கைலாச நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா அறிவித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் கைலாச கிளைகளின் நிர்வாகத்தில் ரஞ்சிதா தீவிர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பின் நித்தியானந்தாவை போல ரஞ்சிதாவும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றும் வீடியோக்களெல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

சீடர்கள் அதிருப்தி:

இதை பார்த்து பலருமே கைலாசாவில் நித்தியானந்தாவிற்கு அடுத்து ரஞ்சிதா தான் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் கண்டு கைலாசாவில் உள்ள சீடர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதாவது, ஆரம்பத்தில் நித்தியானந்தாவிற்கு பணிவிடை செய்ய வந்த நபர்களில் ஒருவர் தான் ரஞ்சிதா. மருந்து மாத்திரை கொடுப்பது, கை கால் பிடிப்பது போன்ற பணிவிடைகளை செய்து இருந்த இவர் எப்படி கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு வரலாம். நாங்கள் எல்லாம் கைலாசவிற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறோம்.

கைலாசாவில் நடக்கும் சர்ச்சை:

எங்களைப் போன்று அவர் கஷ்டப்பட்டாரா? அவர் எப்படி பிரதமர்? என்று ஆதங்கத்தோடு பேசி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ரஞ்சிதா பேசியிருக்கும் சொற்பொழிவு வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிடுவதையும் நிறுத்தி இருக்கிறார்கள். இதை அறிந்த ரஞ்சிதா தனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்கி ஆதரவு தெரிவித்து கொண்டு இருக்கிறார். இதனால் கைலாசாவிலேயே சீடர்கள் மத்தியில் இரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்கு நித்தியானந்தா என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement