இனி படத்தை விநியோகிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு கமல் கூறி இருக்கும் அட்வைஸ் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.
அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக களம் இறங்கி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது உதயநிதி பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
உதயநிதி நடிக்கும் படங்கள்:
மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார்.
கலகத் தலைவன் படம்:
இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. கடந்த வாரம் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் வருகிற 18-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் பல ஊடகங்களுக்கு படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் மூத்த சினிமா பிரபலம் ஒருவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் குறித்து கேள்வி கேட்டு இருந்தார்.
உதயநிதி அளித்த பேட்டி:
அதற்கு உதயநிதி கூறியது, 6, 7 மாதத்திற்கு முன்னாடி படம் விநியோகம் பண்ணுவதை நிறுத்தலாம் என்று முடிவெடுத்தேன். நம்ம மிரட்டி தான் எல்லா படத்தையும் வாங்குகிறோம். எல்லா படத்தையும் நாங்களே செய்கிறோம் என்ற கெட்ட பெயர் வர மாதிரி சில பேர் சொன்னார்கள். அப்பாவும் கூப்பிட்டு இதெல்லாம் தேவையே இல்லை என்று சொன்னார். நானும் ஆமாப்பா, இது பெரிய விஷயம் இல்லை என்று சொன்னேன்.
கமல் தந்த அட்வைஸ்:
உடனே, கமல் சார் தான் இதை தடுத்தார். தயவு செய்து தம்பி தொடர்ந்து படங்கள் பண்ணு சொல்லுங்க. அவர் வந்ததற்கு பிறகு சினிமா நல்லா இருக்கு. வெளிப்படை தன்மையோடு உண்மையான கணக்குகளை கொடுக்கிறார்கள். இது படங்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நல்லது என்று அப்பா கிட்ட பேசினார். அதற்கு பிறகு தான் அப்பா சரி ஓகே நிறைய பண்ணாமா குறைவாக பண்ணிக்கோ என்று சொன்னார். இப்ப கொஞ்சம் குவாலிட்டியாக நல்ல படங்களை பார்த்து அவசரப்படாமல் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.