மெர்சல், அபூர்வ சகோதரர்கள் குறித்து அட்லீயை கலாய்த்த கமல். வைரலாகும் வீடியோ.

0
6429
kamal-atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக மாறியது அனைவருக்கும் தெரியும். மேலும்,இந்த படத்தில் விஜய், எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யாமேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். ஏன்னா,அந்த அளவிற்கு அவருடைய எல்லா படங்களும் செம ஹிட்டு. மேலும், இவர் முதலில் பிரமாண்டமான இயக்குனர் ஷங்கருக்கு உதவியாளராக இருந்தவர். பின்னர் இவர் முதன் முதலாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். அதோடு அட்லீயின் முதல் படமே வேற லெவல் என்னும் சொல் அளவிற்கு வெற்றியைத் தந்தது.

-விளம்பரம்-
Image result for mersal aboorva sagotharargal"

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தெறி,மெர்சல், தற்போது வந்த பிகில் வரை எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இதுவரை அட்லீ சினிமாத் துறையில் இயக்கிய நான்கு படங்களும் பிளாக் பஸ்டர் படங்கள் தான். அதிலும் இவர் அதிகமாக விஜய் உடன் இணைந்து இயக்கிய படங்கள் தான் அதிகம். இந்நிலையில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்களில் வெளியான பிகில் படம் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறது. அதிலும் பாக்ஸ் ஆபீஸில் பிகில் படம் 300 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து உள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் 260 கோடி ரூபாய் வசூல் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும்,மெர்சல் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய் அவர்கள் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும், தன் அப்பாவை நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றிய டாக்டரை பழிவாங்க துடிக்கும் மகன்கள்(அண்ணன், தம்பி). மேலும், இந்த கமர்சியல் படம் மாபெரும் வெற்றி படமாக மாறியது என்றும் சொல்லலாம்.

இதையும் பாருங்க : கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நஸ்ரியா.

மேலும், அந்த வருடம் வந்த படங்களிலேயே டாப்-5 என்ற இடத்தையும் மெர்சல் படம் பிடித்தது. அது மட்டும் இல்லாமல் 100 நாட்கள் தாண்டியும் மெர்சல் படம் தியேட்டர்களில் தூள் கிளப்பிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் 1989 ஆம் ஆண்டு சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன்நடிப்பில் வெளிவந்த “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தை ஒத்துப் போய் உள்ளது என்ற கருத்துக்களும் பரவி வந்தது. இந்த அபூர்வ சகோதர்கள் படத்திலும் இரண்டு மகன்களும் தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை. மேலும்,அந்த அபூர்வ சகோதர்கள் படத்தின் கதையை தழுவிய மாதிரி அட்லியின் மெர்சல் படம் உள்ளது என்ற கருத்தும் பரவியது.அதோடு மெர்சல் படம் வந்தபோது அட்லியும், விஜய் அவர்களும் கமலஹாசன் அவர்களை நேரில் பார்த்து சந்தித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

அப்போது அவர்களுக்குப் பின் அபூர்வ சகோதரர்கள் படம் போஸ்டர் இருந்தது. இந்நிலையில் கமலஹாசன் அவர்கள் ஒரு பேட்டியில் பேசிய போது அதில் ஒருவர் கேட்டது ‘உங்களுடைய வீடியோக்களில் உங்களுக்கு பின்னால் வரும் போஸ்டர்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் எனக்கு உள்ளது. உதாரணத்திற்கு அட்லி மெர்சல் சமயத்தில் உங்களை பார்க்க வரும்போது உங்கள் பின்னால் அபூர்வ சகோதரர்கள் படம் இருந்தது. அதை தொடர்ந்து வந்த பல வீடியோக்களில் உங்களுக்கு பின்னால் காமராஜர், அப்துல்கலாம், பெரியார் போன்ற பல தலைவர்களின் படம் இருந்தது என்று கேட்டார். உடனே கமலஹாசன் அவர்கள் காமராஜர்,அப்துல் கலாம், பெரியார் புகைப்படம் வந்ததெல்லாம் விபத்தல்ல. ஆனால், நீங்கள் சொன்ன அட்லி வீடியோ ஒரு விபத்து தான் என்று சிரித்துக்கொண்டே கமலஹாசன் அவர்கள் கூறினார். மேலும். இந்த வீடியோ குறித்து பல கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள் நெட்டிசன்கள்.

Advertisement